நான்சி மலர்
1/10. குளிர் பானங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது உடலில் கொழுப்பு சேரவும், தேவையற்ற உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணமாகிறது.
2/10. குளிர் பானங்களில் உள்ள அதிகப்படியான இனிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். இது இன்சுலின் சுரப்பை பாதித்து, டைப்-2 சர்க்கரை நோய் வர வழிவகுக்கும்.
3/10. குளிர் பானங்களில் உள்ள அமிலங்கள் (Acids) மற்றும் சர்க்கரை, பற்களின் எனாமல் பகுதியை அரித்து பற்சிதைவை ஏற்படுத்தும்.
4/10. தொடர்ச்சியாக குளிர் பானங்களை உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை கூட்டுகிறது.
5/10. குளிர் பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலம் சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
6/10. மிகவும் குளிர்ந்த நிலையில் பானங்களை குடிக்கும்போது, அது ஜீரண மண்டலத்தின் வெப்பநிலையை குறைத்து செரிமானத்தை மந்தமாக்கும். இதனால் வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஏற்படும்.
7/10. கார்பனேட்டட் பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலம், உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் எலும்புகள் பலவீனமடைய வாய்ப்புள்ளது.
8/10. குளிர் பானங்கள் தாகத்தைத் தணிப்பது போலத் தோன்றினாலும், அவற்றில் உள்ள 'காஃபின்' (Caffeine) உடலை விரைவில் வறட்சியடையச் செய்யும்.
9/10. குளிர் பானங்களில் உள்ள 'ஃபிரக்டோஸ்' (Fructose) சர்க்கரையை கல்லீரல் மட்டுமே கையாளும். அதிகப்படியான சர்க்கரை கல்லீரலில் கொழுப்பாகப் படிந்து 'ஃபேட்டி லிவர்' பிரச்னையை உண்டாக்கும்.
10/10. சில குளிர் பானங்களில் சேர்க்கப்படும் காஃபின் மற்றும் ரசாயனங்கள் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, தூக்கத்தைக் கெடுப்பதோடு மன பதற்றத்தையும் உண்டாக்கும்.