உங்கள் வீட்டின் 'குட்டி சாம்பியன்களுக்கு' தேவையான டாப் 10 ஹெல்தி ஃபுட்ஸ்!

நான்சி மலர்

கடைகளில் விற்கப்படும் 'ஜங்க் ஃபுட்'களைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு வீட்டு உணவுகளைப் பழக்கப்படுத்துவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.

Children healthy food

கேழ்வரகு, கம்பு, சோளம், நாட்டுச்சர்க்கரை, நெய் சேர்த்து உருண்டையாக கொடுக்கலாம். இது குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச்சத்து மற்றும் கால்சியத்தை அளிக்கிறது.

Kelvaragu urundai | Credits: Marudhus kitchen

அரிசி மற்றும் பருப்பு மாவில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்கீரை ஆகியவற்றைச் சேர்த்து அடை சுட்டுத் தரலாம். இது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.

Adai | Credits: Meal heaven

தோசையின் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, மிளகுத்தூள் தூவிக் கொடுக்கலாம். இது குழந்தைகளுக்குத் தேவையான புரதத்தை வழங்குகிறது.

Egg dosa | Credits: Hangout lace

ராகி மாவைப் பயன்படுத்தி இட்லி அல்லது தோசை செய்யலாம். இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளுக்கு உறுதி தரும்.

Ragi idli | Credits: Foodviva

குழைந்த சாதத்தில் பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றிப் பிசைந்து கொடுக்கலாம். இது நல்ல ஆற்றலைத் தரும்.

Lentil rice | Credits: Few minute wonder

ஆப்பிள், வாழைப்பழம், பப்பாளி பழங்களைச் சிறு துண்டுகளாக வெட்டி, தேன் சேர்த்துப் பரிமாறலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Fruit salad

பச்சைப்பயறு அல்லது காராமணியை வேகவைத்து, தேங்காய்த்துருவல் சேர்த்து மாலை நேர சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். இது சிறந்த புரத உணவாகும்.

Karamani sundal | Credits: Raks kitchen

பாலில் ஓட்ஸ், பேரீச்சம்பழம் சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாகத் தரலாம். இது குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைக்கும்.

Smoothies

கோதுமை ரவையைப் பயன்படுத்தி, அதில் நிறைய காய்கறிகளைச் சேர்த்து கிச்சடி செய்யலாம். இது உடல் எடையைச் சீராக வைக்க உதவும்.

Gothumai rava kichadi | Credits: Raks Kitchen

வேர்க்கடலை மிட்டாய், வெல்லம் மற்றும் வேர்க்கடலை கலந்த வீட்டில் செய்தவை. இது சாக்லேட்டுகளுக்குப் பதில் ஒரு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும்.

peanut candy | Credits: Mycookingjourney.com
Melon fruit health benefits in summer
உடல் குளிர்ச்சிக்கு முலாம் பழமே ராஜா! மலிவான விலையில் மாபெரும் சத்துகள்!