சிறு விதைகளில் மறைந்திருக்கும் பெரும் பயன்கள்!

கல்கி டெஸ்க்

மரங்களிலிருந்தும், செடி, கொடி, புல், பூண்டுகளிலிருந்தும் தரையில் விழும் விதைகள் மறுபடியும் விருட்சமாக வீறிட்டு எழும் சக்தி கொண்டவை. விதைக்களுக்குள் ஏராளமான சத்துக்கள் விதைகளில் மறைந்திருக்கின்றன. விதைகளை, சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று கூறலாம். மருத்துவக் குணங்கள் நிறைந்த சில விதைகளின் பயன்பாட்டை இனி காணலாம்.

Seeds

எள் விதை

எள்ளின் விதை கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கம். அதிக நார்ச்சத்து இதில் இருப்பதால் மலச் சிக்கலைத் தீர்க்கவல்லது. இரும்புச் சத்து மற்றும் மற்றும் கால்சியம் சத்து மற்றும் vitamin B6 புரதச் சத்து உள்ளது.

Sesame seed

திராட்சை விதை

பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைப் போக்கவல்லது. கேன்ஸர் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கவல்லது.

Grape seeds | Image credit: vakeesam

முருங்கை வித்தின் குணம்

முருங்கை வித்திற்கு நீர்த்துப்போன விந்தணுவை (semen) கட்டும் தன்மையுண்டு. அதே போல் விந்தணு குறை பாட்டை நீக்கி, விந்தணுக்களின் செயல்பாட்டையும் அதிகப்படுத்தும். உடலுக்குப் பலம் தரும்.

Moringa seed properties | Image credit: aptsomart

மாதுளை விதை

மாதுளை விதைகளைக் காயவைத்துப் பொடி செய்து, கருஞ்சீரகம் மற்றும் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உண்டுவர, கருப்பைப் புள்கள் ஆறும்.

Pomegranate seed

சாரப் பருப்பு

சாரப் பருப்பு என்பது மிக்சர், இனிப்பு, பாயசம் போன்றவற்றில் சுவைக்காகச் சேர்ப்பதுண்டு. சாரப் பருப்பு குளிர்ச்சியுடையது. நீர்க்கடுப்பு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னையுடை யவர்கள் சாரப் பருப்பை ஊறவைத்துப் பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

Sarab dal | Image Credit: Indiamart

பூனைக்காலி விதை

பூனைக்காலி விதைப் பொடியுடன் நெருஞ்சில் விதைப் பொடி 1 சேர்த்து டீஸ்பூன் அளவு பாலுடன் சேர்த்துக் குடிக்க ஆண்மை பெருகும். வெள்ளை நோய் தீரும்.

Catnip seed | Image credit: srinarayanans

சிறுநெருஞ்சில் விதை

சிறுநெருஞ்சில் விதை பொடியுடன் வெட்டி வேர் சிறிது சேர்த்துக் கஷாயமிட்டு வர சிறுநீர் எரிச்சல் தீரும் கருக்குச் சரியாகி நாராளமாகச் வெளியேறும். வீக்கமும் வற்றும்.

Small chestnut seed | Image credit: mooligaikal

திருநீற்றுப்பச்சிலை விதை

இதனை சப்ஜா விதை என்று கடைகளில் குளிர்பாளங்களில் வந்துச் சேர்ப்பர். இவ்விதையை ஊற வைத்து சேர்ப்பார்.இதனை, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து பருக, வெயிலினால் உண்டான உடல் அசதி வாரும். கண் புகைச்சல் கட்டுப்படும். குடல் புண்கள் ஆறும்.

Tiruneiruppachilai seed | Image crdit: LifeofThamizha

பப்பாளி விதை

பப்பாளி விதைகள் 1 டீஸ்பூன் அளவு எடுத்து இடித்து, நீர்விட்டுக் கஷாயமிட்டு வாரம் ஒருமுறை கொடுக்க, குழந்தைகளுக்கு வயிற்றில் உண்டாகும் கீரிப் புழுக்கள் வெளியேறும். ஆசனவாய் அரிப்பு சரியாகும்.

Papaya seed | Image credit: boldsky

பருத்தி விதை

பருத்தி விதையினால் மலச்சிக்கல் தீரும். உடல் பலம் பெருகும். இருமல் நிற்கும். இதனை ஊறவைத்து அரைத்துப் பாலெடுத்துப் பனைவெல்லம் சேர்த்துப் பானமாகப் பருகுவர்.

cotton farming | Img Credit: Agri forming

பூசணி விதை

வெண் பூசணி விதை உடலுக்குக் குளிர்ச்சி தரும். உடலில் உண்டாகும் அதிகப் படியான பித்தத்தைக் குறைக்கும். பூசணி விதையை ஊறவைத்து அரைத்து, பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து உண்டு வர, உடல் எடை கூடும்.

Pumpkin seed | Image Credit: bbcgoodfood

துளசி விதை

துளசி விதை 2 கிராம் அளவு எடுத்து, குளிர்ந்த நீர் விட்டு அரைத்துக் கொடுக்க பிள்ளை பெற்றபின் அடிவயிற்றில் உண்டாகும் குத்தல் நீங்கும். குத்திருமல் தணியும். துளசி விதையைக் குளிர்ந்த நீரில் ஊறவைத்து, அந்நீரைப் பருக, வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

Basil seed | Image Credit: Wion

பரங்கி விதை

பரங்கி விதையைப் பொடித்து 2 டீஸ்பூன் அளவு 2 தம்ளர் நீர் விட்டுத் கொதிக்க வைத்து ½ தம்ளராக வற்றியதும் வடிகட்டிக் குடிக்க, வெள்ளைப் போக்கு குணமாகும். சிறுநீரைப் பெருக்கும்.

Prangi seed

தேற்றான் கொட்டை (விதை )

தேற்றான் கொட்டை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தேற்றான் விதை கலங்கிய நீரை தெளிவுபடுத்தும். இதைத் தண்ணீரில் உரைத்துக் கரைத்தால், அத் தண்ணீர் தெளிந்து நிற்கும். நாம் குடிக்கும் நீரில் 4,5 தேற்றான் கொட்டைகளைப் போட்டு வைத்தால் நீரிலுள்ள மாசுக்கள் நீங்கி, நீர் தூய்மை பெறும்.

Theran Nut seed | Image Credit: nattumarunthukadai

நாயுருவி விதை

நாயுருவி விதையைப் பொடித்து நன்கு சலித்து,¼ டீஸ்பூன் அளவு பாலில் கலந்து குடித்துவர, நரம்புகள் பலப்படும். விதைப் பொடி அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். உடல் எடையைக் குறைக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது.

Nauruvi seed | Image Credit: Amazon
Manathakkali keerai Soup | Img Credit: Subbus kitchen