எஸ்.மாரிமுத்து
அஜீரணம் சரியாக ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது கருவேப்பிலை, சிறிது இஞ்சி, சிறிது சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்கலாம்.
தினம் ஒரு டம்ளர் கருப்பு திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.
வயிற்றுப்போக்கு நிற்க வெற்றிலையுடன் சிறிது ஓமத்தை சேர்த்து மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் சரியாகும்.
வாயு தொல்லை நீங்க 4 பல் வெள்ளை பூண்டை பசும்பாலில் வேக வைத்து சாப்பிட்டு வர வாயு தொல்லை நீங்கும்.
வேப்பிலை கொழுந்தை நன்றாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் தொந்தரவு நீங்கும்.
வயிற்று வலி, வயிற்றுப் பொருமல் சரியாக ஏலப் பொடி சிறிது எடுத்து தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
காய்ந்த திராட்சையை சுடுநீரில் ஊற வைத்து அரை மணி நேரத்துக்கு பின் அழுத்திப் பிழைந்து அந்த சாறை வடிகட்டி கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும்.
நரம்புத் தளர்ச்சி குணமாக நெய்யில் பொடியாக நறுக்கிய வெள்ளை வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டு வரலாம்.
குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து, குளித்து வர அரிப்பு, தேமல் போன்ற சரும நோய்கள் குணமாகும்.
வேப்பெண்ணெயுடன், மஞ்சள் பொடி சேர்த்து கலந்து காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் நாளடைவில் குணமாகும்.
கருணைக்கிழங்கு சிறு துண்டுகளாக நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து கூட்டு, சாம்பார் செய்து சாப்பிட மூலம் குணமாகும்.
படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் ஈரில் உள்ள புண்கள் ஆறும்.
எலுமிச்சை சாறில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு குமட்டல் வரும் போது சாப்பிட்டால் குமட்டல் நீங்கும்.