"உடம்பு மட்டும் போதாது, இதுதான் ரகசியம்!" – Health secrets - wellness quotes

ஆர்.ஐஸ்வர்யா

மனமும் உடலும் ஒன்றிணைந்ததே முழுமையான ஆரோக்கியம். ஆரோக்கியத்தை ஒரு கடமையாகவும், பெரும் செல்வமாகவும் கருதிய அறிஞர்களின் பொன்மொழிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

Health quotes

புத்தர்: "உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒரு கடமையாகும். இல்லையெனில், நம்மால் மனதை வலுவாகவும், தெளிவாகவும் வைத்திருக்க முடியாது.”

Buddha

மகாத்மா காந்தி: “ உண்மையான செல்வம் என்பது ஆரோக்கியமே தவிர, தங்கம் மற்றும் வெள்ளி துண்டுகள் அல்ல.”

Mahatma gandhi

ஹிப்போகிரட்டீஸ்: “உணவே மருந்தாகட்டும், மருந்தே உமது உணவாகட்டும்.”

Hippocrates

அரிஸ்டாட்டில்: “நாம் மீண்டும் மீண்டும் எதைச் செய்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். எனவே, ஆரோக்கியம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு பழக்கம்.”

Aristotle

தாமஸ் ஆல்வா எடிசன்: “எதிர்கால மருத்துவர் மருந்து கொடுக்க மாட்டார், மாறாக மனித உடல் பராமரிப்பு, உணவு முறை மற்றும் நோயைத் தடுத்தல் ஆகியவற்றில் நோயாளிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவார்.”

Thomas alva edison

தலாய் லாமா: “மகிழ்ச்சி என்பது ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த வடிவம்.”

Dalai lama

பெஞ்சமின் பிராங்க்ளின்: “ஒரு அவுன்ஸ் தடுப்பு முறை (Prevention), ஒரு பவுண்ட் சிகிச்சைக்கு (Cure) சமமானது.”

Benjamin franklin

திருவள்ளுவர் (உணவு கட்டுப்பாடு குறித்து):

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

(முன் உண்ட உணவு செரித்ததை அறிந்து, அளவோடு உண்டால், அதுவே நீண்ட ஆயுளுக்கு வழியாகும்.)

Thiruvalluvar

சத்குரு : “ஆரோக்கியம் என்பது வெறும் உடல் நிலை மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல் நிலை. உங்கள் மனம் ஆனந்தமாக இருந்தால், உங்கள் உடலும் தானாகவே ஒத்துழைக்கும்.”

Sathguru

தீபக் சோப்ரா: “நீங்கள் சிந்திக்கும் விதம், நீங்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் நீங்கள் உண்ணும் விதம் ஆகியவை உங்கள் ஆயுளை 30 முதல் 50 ஆண்டுகள் வரை தீர்மானிக்கலாம்.”

Deepak chopra

ரூமி: “உங்கள் இதயம் ஒரு கருவி போன்றது. அதனை அமைதி எனும் இசையால் நிரப்பினால், உடல் முழுவதும் அதன் எதிரொலி கேட்கும்.”

Rumi
Simple home health remedies | Img credit: AI Image
இந்த வீட்டு வைத்தியங்கள் உங்களுக்குத் தெரிஞ்சா டாக்டர்கிட்ட போக மாட்டீங்க!