ம.வசந்தி
சிலருக்கு பேருந்தில் செல்லும் பொழுது வாந்தி எடுக்க வரும். அவர்கள் ஒரு கிராம்பையோ அல்லது ஒரு ஏலக்காயையோ வாயில் போட்டு சுவைத்துக் கொண்டிருந்தால் வாந்தி வருவது தவிர்க்கப்படும்.
புழுவெட்டு என்னும் முடி உதிர்தலைப் போக்க நவாச்சாரத்தைப் பொடித்து தேனில் கலந்து அவ்விடங்களில் தடவ பயனளிக்கும்.
காலையில் சிறிய இஞ்சித்துண்டு, மதியம் 1/2 ஸ்பூன் சுக்குப்பொடி இரவு படுக்கும் முன் அரை ஸ்பூன் கடுக்காய் பொடி வாயில் போட்டு வெந்நீர் பருக இளமை துள்ளும்.
ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் கசகசா பொடியை போட்டு கலந்து சாப்பிட்டு தூங்கினால், தூக்க மாத்திரையே தேவையில்லாத அளவுக்கு தூக்கம் வரும்.
ரத்த மூலத்தால் சிரமப்படுபவர்கள் காரம் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி சாப்பிடுவதுடன் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.
ஆரஞ்சு, எலுமிச்சை ,நெல்லிக்காய், கொய்யா இவைகளில் ஏதேனும் ஒன்றை அன்றாடம் சேர்த்து வருபவர்களுக்கு பக்கவாதம் வரும் அபாயம் எப்போதும் இல்லை.
உள்ளங்கை கால்களில் அதிகமாக தோல் உதிர்ந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் கூட்டி குடித்து வர தோல் உரிவது நிற்கும்.
தலைமுடி நல்ல கருப்பாக வளர வேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு காய்ச்சி ஆற வைத்து தினமும் தடவி வர வேண்டும்.
சிவந்த மாவிலைத் தளிர்களை பறித்து அப்படியே பச்சையாக வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். 48 நாட்களில் மேடையில் பாடி அசத்தும் அளவிற்கு தயாராகி விடுவீர்கள்.
உடலில் காயமோ புண்ணோ இருப்பின் கத்தரிக்காய் சேர்க்கக்கூடாது. அது புண்கள் ஆறுவதைத் தாமதப்படுத்தும்.
இஞ்சியை நீரில் தட்டி போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர பல் கூச்சம் தீரும்.
சிலருக்கு பல்லின் ஈறுகளில் ரத்தம் வருவதுண்டு. இவர்கள் உப்பு, கடுக்காய், சீரகம் மூன்றையும் பொடி செய்து பல் துலக்கினால் ஈறுகளில் ரத்தம் வருவது நிற்கும்.
வயிற்றை சுருட்டி பிடித்துக் கொண்டு வலி எடுத்தால் சுக்கை பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
எள்ளுத்துவையலில் புளிச் சேர்க்காமல் தொடர்ந்து சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பால் சுரப்பதுடன் பலமும் கூடும் .
கோடைகால வேர்க்குரு நீங்க சந்தனத்தை அரைத்து வேர்க்குரு உள்ள இடங்களில் பூசலாம். பனை நுங்கு கொண்டு தேய்த்தாலும் வேர்க்குரு வராது.