0,00 INR

No products in the cart.

அன்பு வட்டம்!

ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வரும் பெண் குழந்தையின் ஸ்டைல் நடையை ரசித்தீர்களா அனுஷா மேம்?
– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்
நடையை விடுங்க… ‘ஹார்லிக்ஸ்?’னு அம்மா ஆச்சரியத்துடன் கேட்டதும், ‘நயி… பாலக் பனீர்’ (தமிழ்ல கீரைப் பொரியல்)னு கிண்டலும் குழைவும் மிக்ஸ் செஞ்சு ரவுஸ் பார்வை பார்க்கும் பாருங்க… அதுதான் க்யூட்டோ க்யூட்! ஆமா… நீங்க இன்னும் போத்தீஸோட லேட்டஸ்ட் விளம்பரம் பார்க்கலையாக்கும்? குட்டிப் பயல் ரித்விக் ஆறு வேடங்களில் கலக்குறானே!

மங்கையர் மலரில் தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் இனிக்கும்னு கேட்டா, நான் எதன்னு சொல்வேன்? என்னத்தன்னு சொல்லுவேன்? ஒரு சின்ன க்ளு தரேன்? உங்க பேருல உள்ள கடைசி இரண்டு எழுத்து மாதிரி இருக்கும். போதுமா? ஹேப்பி?

பலரால் லட்சியங்களை அடைய முடியாமல் போகிறதே?
– வாசுதேவன், பெங்களூரு
ஒரு சின்ன டெஸ்ட்! நீங்க மொட்டைமாடிக்கு வர வேண்டியிருக்கும்? பரவாயில்லையா?மத்தியானம், ஒரு பன்னிரண்டு மணி வாக்குல, ஒரு காகிதத் தாளை எடுத்துக்கிட்டு, சூரியனுக்கு நேரா காட்டுங்க. கண்ணுதான் கூசுமே தவிர, வேறு ஒண்ணுமே ஆகாது. அதுவே, அந்தக் காகிதத்தை ஒரு லென்ஸுக்குக் கீழே வெச்சுக் காட்டுங்க… சில விநாடிகள்ல காகிதத்தாள், ‘குப்’னு நெருப்புப் பிடிச்சு எரியும்! இது நம்ப ஸ்கூல்லயே செஞ்சுக் காட்டிய ஒளிக் கற்றைகளை ஒரே புள்ளியில் குவிக்கும் பரிசோதனைதான்! ஆனா, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
நாம்ப எந்த வேலை செஞ்சாலும் மும்முரமான எண்ணக் குவியல் தேவை. சிந்தனைக் குவியக் குவிய ஆற்றல் பெருகும். உங்களிடம் வெறித்தனமான ஃபோகஸ் இருந்தால், லட்சியம் நிச்சயம். ஒருவேளை, காலம், நேரம், சூழ்நிலை, அமைப்பு போன்ற ஏதோ ஒரு காரணத்தால், என்ன வெற்றியானது கொஞ்சம் தள்ளிப் போகக் கூடும்! ஆனால், ஒரேயடியாகக் கைவிட்டுப் போய்விடாது.

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு?
– காயத்ரி குமரேசன், கடலூர்
கே.பாலச்சந்தர் ஸ்கூல்! அதனால், இமேஜெல்லாம் பார்க்காமல் பற்பல வேஷங்களில் நடித்தவர்.
‘மை ஸன்… ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்று நடிகர் திலகத்தையே அழ வைப்பார். (தங்கப்பதக்கம்)
‘எதிர்நீச்சலி’ல் கிட்டு மாமா (‘நேக்கு என்னடி தெரியும் பட்டு?’)
‘காசேதான் கடவுளடா’ படத்தில் காதுல பூ வைத்தபடி, ‘ஜம்புலிங்கமே ஜடாதரா’ – காமெடிக் கூத்து.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தில் முதலியார் பாஷை பேசி நடித்திருப்பார். மிதமான, தரமான நடிப்பிலும் ஜொலிப்பு.
‘ராஜ நாகம்’ படத்தில் ரோஷக்கார மாணவன்.
’பைரவி’, ‘சதுரங்கம்’ பட டைட்டிலில் ஸ்ரீகாந்த் பெயர் முதலிலும், ரஜினிகாந்த பெயர் அடுத்ததாகவும் இடம்பெறும்; அந்த அளவுக்கு மார்க்கெட் இருந்தவர்.
‘வெண்ணிற ஆடை’யில் ஸ்டைலிஷ்ஷான டாக்டர்… ‘என்ன என்ன வார்த்தைகளோ’ன்னு அழகு ஜெயலலிதாவை உருக வைத்தவர்.
பேரோடும் புகழோடும் நிறை வாழ்வு வாழ்ந்தாயிற்று…
போய் வாருங்கள் ஐயா!

புதுப்புது கிரிக்கெட் வீரர்களின் வருகை அதிகரித்து வருவது பற்றி…?
– மஞ்சு வி.தேவன், பெங்களூரு
அதுதான் ஐ.பி.எல்ன் வெற்றி! இந்தியக் குழுவில் 11 பேர். ரிஸர்வ்வில் ஒரு 3 பேர். 14 பேர் தேர்வாகிறார்கள். அப்போ, 120 கோடி ஜனத்தொகையில் இந்த 14 பேர் மட்டும்தான் தேறினார்களா? அப்படியானால் அவ்வளவு திறமைசாலிகள் எல்லா மேட்சிலும் ஜெயிக்கலாமே? ஸோ, இந்த அரித்மெடிக்ஸ் எல்லாம் சரிபடாது. இளம் திறமைசாலிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய கதவுகள் திறக்கப்படணும். திறந்திடு சீசேம்! க்ளப், லீக் டிஸ்ட்ரிக், ஸ்டேட் மேச், தற்போது ஐ.பி.எல்! இதன் மூலமாக நிறைய புதுப்புது வீரர்களின் வருகை… சபாஷ்! சரியான போட்டி!! ஹ… ஹ… ஹா!!!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்!

மேடம், ‘அக்னிபாத் திட்டம்’ என்றால் என்ன? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? - வி. கலைமதி சிவகுரு, நாகர்கோவில் அது ‘அக்னிபாத்’ அல்ல! அக்னிபத்! ‘அக்னிப்பாதை’ என்று பொருள், கலைமதி! “17.5 முதல் 23 வயதுக்கு...

அன்புவட்டம்!

இடைவிடாமல் வேலை செய்யும் எமதர்மன் இரண்டு நாட்கள் லீவில் சென்றால்...! - வாசுதேவன், பெங்களூரு ‘வென்டிலேட்டர் எடுத்தால் முடிஞ்சுடும்’ என்ற கேஸ்கள் கூட வென்டிலேட்டர் எடுத்த பின்னும் இரண்டு நாட்கள் சுவாசிப்பார்கள். - மெடிக்கல் மிராக்கிள்! கூலிப்படையை வெச்சு...

அன்புவட்டம்!

மாம்பழ சீஸனாச்சே? நீங்க விரும்பியப்படி ஒரு பழமாவது நசுக்கி, கசக்கி, ஜூஸாக்கி, ஓட்டைப் போட்டு உறிஞ்சினீங்களா? நேரம் இருந்ததா? இல்ல வாசகர்களுக்கு பதில் சொன்னதோடு சரியா? -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம் இவ்ளோ பழகியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டது...

ஒரு வார்த்தை!

அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு ‘தோசை! சீட்டுக் கட்டில் உள்ள அத்தனை சீட்டுக்களையும் குப்புற பரப்பி வெச்சுடணும். ஆளுக்கு இரண்டு சீட்டுக்களைக் குருட்டாம் போக்கில் எடுக்கணும்....

அன்புவட்டம்!

நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, ‘குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி... ஒரு ஆர்வக் கோளாறில்...?!) -ஆர். நாகராஜன், செம்பனார்கோவில் ‘தவறான கேள்விக்குப் பதில் எழுத முயற்சி செஞ்சாலே, முழு...