ஏப்ரல் 3-ல் ‘கிராமி’ விருது விழா; லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுவதாக அறிவிப்பு!

ஏப்ரல் 3-ல்  ‘கிராமி’ விருது விழா; லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுவதாக அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சர்வதேச அளஈள் திரைப்பட துறையினருக்கு ஆஸ்கர் விருது போல் இசை துறையினருக்கு 'கிராமி விருது' கருதப் படுகிறது. இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில் தெரிவித்ததாவது;

இந்த வருடத்துக்கான கிராமி விருது வழங்கும் விழாவானது ஏற்கனவே ஜனவரி 31-ம் தேதி நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு, பின்னர் கொரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள க்ரிப்டோ.காம் என்ற அரங்கில் நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி, இப்போது இந்த வருடம் ஏப்ரல் 3ம் தேதியன்று லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம். கிராண்ட் கார்டன் ஏரினா அரங்கில் நடைபெறும் என தீர்மானிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட தேதியில் நடக்காமல் தள்ளிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com