
இன்று பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்
அவிட்டம் 3, 4 பாதங்கள்:இன்று சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
சதயம் 4ம் பாதம்:இன்று வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இன்று குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுப்பது நல்லது. பிள்ளைகள் உடல் நலனில் கவனம் தேவை. கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9