கும்பம் - 28-12-2022

கும்பம் - 28-12-2022
Published on

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இன்று வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.  மற்றவர்களின்  பிரச்சனைகளுக்கு வலியசென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

சதயம் 4ம் பாதம்:இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com