அரைக்கீரை குழம்பு

அரைக்கீரை குழம்பு

Published on

என்.கோமதி, நெல்லை.

தேவை:-

அரைக்கீரை நறுக்கியது 1கப்

புளிகரைசல்1/2கப்

மிளகாய் வத்தல்4

சின்ன வெங்காயம்6

காயப்பொடி 1/2 டீஸ்பூன்

வெந்தயம்1/2டீஸ்பூன்

கடுகு1/2டீஸ்பூன்

உப்புதிட்டமாக

நல்லெண்ணெய் 2டீஸ்பூன்

செய்முறை:-

வாணலியில், நல்லெண்ணெயை ஊற்றி, மிதமான தீயில் அடுப்பில் வைத்து, காய்ந்ததும், கடுகு, வெந்தயம் போட்டு வெடித்ததும், வத்தலை கிள்ளிப் போடவும்.சிவந்தவுடன் வெங்காயத்தை இரண்டாக, குறுக்கே வெட்டி சேர்த்து, வதங்கியதும், புளிக்கரைசலை ஊற்றவும். புளி கொதித்தவுடன் உப்பு மற்றும் கீரையைப் போட்டு அவ்வப்போது, பிரட்டி வேகவுடவும். கீரை வெந்தவுடன், காயப் பொடி சேர்க்கவும்.கீரை குழம்பு ரெடி. சாதத்தில் ஊற்றி, பிசைந்து, சுட்ட அப்பளத்துடன் சாப்பிட ருசி.

logo
Kalki Online
kalkionline.com