சமையலறையில் உள்ளது கொரோனாவுக்கு தீர்வு! -சித்த மருத்துவர் விக்ரம் குமார் பேட்டி!

சமையலறையில் உள்ளது கொரோனாவுக்கு தீர்வு! -சித்த மருத்துவர் விக்ரம் குமார் பேட்டி!

நேர்காணல்: பிரமோதா.

இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக சரிந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் ருத்ர தாண்டவம் எடுத்துள்ளது..ஒருபுறம் கொரோனா.. மறுபுறம் ஒமைக்ரான் என்று இரட்டை தாக்குதல்அதனால் என்ன? எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும்.. நம் வீட்டு சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது என்கிறது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம்முதல் அலையின் போது கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்த சித்த மருத்துவம்.. இரண்டாவது அலையிலும் கை கொடுத்தது..

இதோ.. இந்த மூன்றாவது அலையிலும். பெருமளவு உதவிக் கொண்டிருக்கிறது..

அஞ்சறைப் பெட்டியில் வைத்து நாம் பயன்படுத்தி வரும் பொருட்களை கொண்டு கொரோனாவுக்கு எப்படி தீர்வு காணலாம் என விவரிக்கிறார்..சித்த மருத்துவரான டாக்டர். வி. விக்ரம் குமார். MD(S).

சித்த மருத்துவம் மூலமாக கொரோனாவுக்கு சிறப்பு நிவாரண சிகிச்சை அளித்ததற்காக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கையால் தமிழக அரசு விருது கிடைக்கப் பெற்றவர். மேலும் பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர் டாக்டர். விக்ரம் குமார். வேலூர் திருப்பத்தூரில்..சிறப்பு கொரோனா வார்டு ஏற்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார். அவரிடம் சிறப்பு பேட்டி..

இந்தியாவில் கொரோனா 3-ம் அலையின் தீவிரம் எப்படி இருக்கிறது?

முதல் இரண்டு அலைகளில் இருந்ததை விட கொரோனாவின் பரவல் இப்போதைய 3-ம் அலையில் அதிவேகமாக இருந்தாலும் அதன் பாதிப்பு குறைவாக இருப்பது ஆறுதலான விஷயம். இறப்பு விகிதமும் கம்மி. நுரையீரலைத் தாக்கும் கொரோனாவின் தன்மையும் 3-வது அலையில் குறைவாக இருக்கிறது. லேசான சளி, இருமல், உடல் வலி என குறிகுணங்கள் மட்டுமே பெரும்பாலும் இருப்பதால் அதிகம் பதற்றப்பட அவசியமில்லை. குறிகுணங்கள் சார்ந்து மருத்துவருடைய ஆலோசனையும் இருந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை! அதே வேளையில் அஜாக்கிரதையாகவும் இருக்கக்கூடாது.

எப்படிப்பட்ட உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்?

இயற்கையான உணவுகளை இப்போதைய சூழலில் எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம். சூடான உணவுகளே இப்போதைய காலத்திற்கான தாரக மந்திரம் என்றும் சொல்லலாம்.. மிளகு, மஞ்சள், கிராம்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். செரிமானம் ஆவதற்கு கடினமான உணவுகளைத் தவிர்த்து ஆவியில் வெந்த உணவுகள் சிறந்தவை. இலவங்கப்பட்டை, அன்னாசிப்பூ, சுக்கு, கிராம்பு ஆகிய நறுமணமூட்டும் மருத்துவப் பொருட்களை சிறிதளவு எடுத்து குடிநீரில் போட்டு காய்ச்சி அருந்தலாம். அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை ஆகியவற்றுக்கு வைரஸ்களை எதிர்க்கும் தன்மை உண்டு. அதேபோல. சர்க்கரை சேர்த்த தேநீருக்குப் பதிலாக, இஞ்சித் தேநீர், சுக்கு கஷாயம் போன்றவற்றை அருந்தலாம். தினப்படி உணவில் மிளகு ரசம், கொள்ளு ரசம், தூதுவளை துவையல், புதினா சட்னி, நெய்யில் வதக்கிய சின்ன வெங்காயம், மிளகுத் தூவிய பழ ரகங்கள் சேர்த்து கொள்வது நல்லது. குறிப்பாக நெல்லிக்காய் சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலை வழங்கும். தினமும் கீரை, காய்களை சாப்பிட்டு நோய்களுக்கு டாடா காட்டலாம்

கபசுர குடிநீரை எடுத்துக்கொள்ளலாமா? அதை எப்படி அருந்துவது நல்லது?

தாராளமாக கபசுர குடிநீர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையோடு எடுப்பது சிறந்தது. பாதுகாப்பு என நினைத்து நீண்ட நாட்களுக்கு கபசுரக் குடிநீரை எடுத்துக்கொள்ளக்கூடாது. சுமார் 5 கிராம் கபசுரக் குடிநீர் பொடிக்கு 240 மி.லி. தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் 60 மி.லி. ஆக வற்றிய பிறகு 30 முதல் ஐம்பது மி.லி. வரை வயதிற்கு ஏற்ப பருகலாம். வயிற்றுப் புண் பிரச்சனை இருந்தால், கபசுர குடிநீரை உணவிற்கு பின்பு அருந்த வேண்டும். நோய் எதிர்க்கும் மருந்தாக ஐந்து நாட்களுக்கு எடுத்துக்கொள்ளலாம். சளி, இருமல். தொண்டைக் கரகரப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக நிவாரணம் இத்னமூலம் கிடைப்பதைப் பார்க்கலாம். 

கொரோனாவின் குறிகுணங்களைக் குறைக்கும் சித்த மருந்துகள் என்ன?

சளி, இருமல் போன்ற குறிகுணங்களைக் கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஆடாதோடை மணப்பாகு, நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர், தாளிசாதி சூரணம், அதிமதுர சூரணம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு அலைகளில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட அமுக்கரா சூரணம், பிராமனந்த பைரவம், வசந்தகுசுமாகரம் போன்ற மருந்துகள் நிச்சயம் துணை நிற்கும்

சிறைக் கைதிகளுக்கும் நீங்கள் சித்த மருத்துவ சிகிச்சை அளித்ததாக கேள்விப்பட்டோம். அந்த அனுபவம்ற்றி சொல்லுங்களேன்?

யெஸ்.. திருப்பத்தூர் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மைய வளாகத்தில் 10 கைதிகளுக்கு சிகிச்சை அளித்தது தனி அனுபவம். அந்த கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வந்திருந்தது. அவர்களுக்கு சித்த மருந்துகள் அளித்து சிகிச்சை அளித்திட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்று அவர்களுக்கென தனி அரங்கம் தயாராக இருந்தது!

அகைதிகளும் அவர்களுக்கு காவலாக போலீசாரும் வந்து சேர்ந்தனர்.. முதல் முறை கைதிகளைப் பரிசோதனை செய்ய பாதுகாப்பு கவசம் அணிந்துக்கொண்டு நான் உட்செல்ல இரண்டு காவலர்கள் எனக்குக் காவலாக அரங்கத்திற்குள் நுழைந்தனர்

'உங்கள் அனைவருக்கும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம்சம்மதமா'' என கைதிகளிடம் ஒப்புதல் வாங்கிவிட்டு, தொடங்கியது அவர்களுடனான பிணைப்பு! சிறைக்கு சென்றதற்கான காரணத்தை ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தேன். . நிறைய பேசினோம்உணவுகள் குறித்தும் வாழ்க்கை முறை குறித்தும் மன நலம் குறித்தும் அதிகமாக பேசினோம். வெவ்வேறு வயதினர் கைதிகளாக இருந்ததால் சில நாட்களில் அந்த அரங்கமே உற்சாகமாக மாறியிருந்தது! யோகா பயிற்சி அவர்களுக்கு உற்சாகம் அளிப்பத்தை என்னால் உணர முடிந்ததுமூலிகை சூப் ரகங்கள் அவர்களின் மழுங்கிய நாவிற்கு சுவை கூட்டியதை அறிய முடிந்தது

சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக ஆங்காங்கே இருக்கும் சாளரங்களில் கைதிகள் நின்றுக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது என் மனதின் ஒரு ஓரத்தில் சிறு பாரம்! 'சார் எப்போ சார் விடுவீங்கதிரும்பவும் ஜெயிலுக்காஇல்ல ஆஸ்பத்திரிக்கா' என அவர்கள் கேட்கும் போது, என்ன சொல்வதென்று தெரியாமல் வெற்றுப் புன்னகை மட்டுமே எனது பதிலாக இருக்கும். நிறைய பேசினோம்

நாட்கள் செல்ல செல்ல, காவலர்கள் துணை இல்லாமலே அவர்களோடு உட்சென்று உரையாடும் அளவிற்கு எங்கள் நட்பு அதிகரித்திருந்தது. சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு வெளியில் நின்ற காவல் துறையினரும் அந்த சூழலில் கைதிகளே! உள்ளிருப்பவர்களை பாதுகாப்பாக மீண்டும் ஒப்படைக்கும் வரை காவலர்களும் குடும்பத்தைப் பிரிந்த கைதிகளே!… உறக்கம் தொலைத்திருப்பார்கள் பாவம்நாற்கலியில் சாய்ந்திருக்கும் அவர்கள் கழுத்துகாற்றின் ஓசை கேட்டால் கூட பதறும் அவர்களின் உடல் மொழி!… காவலர்களின் தியாகம் அசாத்தியமானது!… ஏழு நாட்கள் கைதிகளோடும் காவலர்களோடும் புதுமையான அனுபவங்கள் கிடைத்தன!

தூரத்திலிருந்து கைதிகளின் குடும்பத்தினர் அவர்களைப் பார்த்து கண்ணீர் சிந்துவதைப் பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கும்… 'நீ ஜெயில்லயே கூட இருப்பாஆனா இந்த கொரோனா கிரோனாலாம் இல்லாம இருந்தா போதும்பா…' என ஒரு தாய் வேண்டிய போது அனைவருக்கும் முகத்தில் இறுக்கம் தான்!…

அனைவருக்கும் சித்த மருந்துகளை கொடுத்து முடித்த பிறகு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தோம்நெகடிவ் வந்துவிட வேண்டுமென அனைவரும் காத்திருந்தோம்எங்களின் கூட்டு எண்ணம் நிறைவேறியதுசித்த மருந்துகள் பலன் அளித்திருந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!… அவர்களை டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப அனைத்து காவல்துறை ஏற்பாடுகளும் தயார்வெளியில் அவர்களைப் பார்ப்பதற்காக குடும்பத்தினர்உணர்வுப் போராட்டம்ஒரு கைதி 'சார் இங்க கொடுத்த சித்த மருந்துகள எங்களுக்கு கொடுப்பீங்களா!… அந்த சூப் கொஞ்சம் ஜெயில்லயும் கொடுக்க சொல்லுங்க சார்…' என கேட்ட போதுமஎனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை! கடைசியாக பத்து கைதிகளும் 'சார்வரட்டுமாரொம்ப நன்றி.' என உற்சாகமாக சொல்லிவிட்டு சென்றபோது, ஏதோ ஆத்மார்த்தமான நண்பர்களைப் பிரிவதைப் போன்றதொரு உணர்வு!.

ணர்வு நெகிழச் சொல்லி முடித்தார் டாக்டர். விக்ரம் குமார்.

''வேறு ஏதாவது மறக்க முடியாத சம்பவம் உண்டா?

நிச்சயமாக! கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில், மெல்லிய உருவம் கொண்ட இளைஞர் ஒருவர் வந்தார். சுமார் 10 கி.மீ தூரத்திலிருந்து நடந்தே வந்திருந்தார். அந்த பதிலைக் கேட்டு ஆடிப் போனேன். கொரோனா பாசிடிவ் நபர் ஒருவர் எப்படி இவ்வளவு தூரம் நடந்திருக்க முடியும்? நல்லவேளை அவரது ஆக்சிஜன் அளவு சரியாக இருபப்தைக் காட்டியது பல்ஸ் ஆக்சிமீட்டர்! . ''இந்த சூழல்ல இவ்ளோ தூரம் யாராவது இப்படி நடந்து வருவாங்களா?" என கேட்டதற்கு அவர் சொன்ன பதில் அதிர வைத்தது.

'சார்இது புது நோய்இத பத்தி நிறைய டிவில சொல்றாங்க, போன்லயும் பாக்குறேன்கொரோனா வந்துட்டா சீக்கிரமா மத்தவங்களுக்கு தொத்திடும்னு எனக்கு நல்லாவே தெரியும்ஆம்புலன்ஸ் வர வரைக்கும் வீட்டிலேயே காத்துக்கிட்டு இருந்தா எங்க அம்மாக்கும் தங்கச்சிக்கும் பரவிடும்னு தோணுச்சுஅதான் எனக்கு கொரோனானு உறுதியானதும் இந்த மையம் நோக்கி நடக்கத் தொடங்கிட்டேன். வழில யார்கிட்டயாவது லிஃப்ட் கேட்டிருக்கலாம்தான்..ஆனால் என்னால் அவர்களுக்கு கொரோனா தொத்து பரவ வாய்ப்பிருக்கு இல்லையா! அதனால தான் நடந்தே வந்துட்டேன்'' என்றாரே பார்க்கலாம்.. நான் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனேன். இலேசான அறிகுறிகளுடன் வந்த அந்த இளைஞர் படிப்படியாக நலம் பெற்று வீடு திரும்பும் நாள் வந்தது. ''உடம்பு சரியாயிடுச்சேனு நடந்தே போகாதீங்க.. ஆட்டோல போங்க'' என்று சொன்னதற்கு, ''இல்ல சார். என்ன ஆம்புலன்ஸ்ல விட்ருங்கவீட்ல போயி ஒரு வாரம் தனியா இருந்துட்டு அப்புறமா எல்லோரடவும் புழங்கிக்கிறேன்.. '' என்றார். அந்த மனித நேய நடையாளி! மறக்க முடியாத நபர்.

பதற்றமாக இருக்கும் கொரோனா சூழலை எதிர்கொள்வது எப்படி?

நோயின் தன்மையைக் கண்டு அச்சப்படாமல் நேர்மறை எண்ணத்தோடு பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் இந்த அலையை பெரியளவில் பாதிப்பில்லாமல் கடந்துவிட முடியும். நோய் நம்மை தாக்கிவிடுமோ என்னும் அச்சமே நோயை அதிகப்படுத்தும் என்பது உள அறிவியல். ஆகவே எவ்வித பதற்றமும் இல்லாமல் உற்சாகத்தோடு பாதுகாப்பு முறைகளை மட்டும் கடைப்பிடியுங்கள், கொரோனா இல்லா சமுதாயம் சாத்தியம் ஆகும்!

ற்சாகமாகச் சொல்லி நம்பிக்கை டானிக் கொடுத்த டாக்டர் விக்ரம் குமாருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

Other Articles

No stories found.