0,00 INR

No products in the cart.

‘அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’

lll

ஒரு கலைஞனின் பயணம் முடிந்தது

– வினோத்

 

மிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நெடுமுடி வேணு, அண்மையில் கொரோனா கொடூரத்துக்குப் பலியானார்.

கலகலப்பான சுபாவம் கொண்டவரான வேணு, தமது எளிமையான அணுகுமுறை மூலம் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டவர். நடிப்புத்துறை தவிர, கிராமியப் பாடல்கள், மிருதங்கம் இசைக் கருவியைக் கையாளுவதிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். 1978 முதல் மேடை நாடகங்களில் மும்முரமாகக் கவனம் செலுத்தி வந்தார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ‘காலகமுடி’ பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்த அவர், நாடக கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் தன் கிராமத்திலிருந்து திருவனந்தபுரம் வந்து வசித்தவர். சில படங்களில் நடித்து மக்களிடையே நன்கு அறிமுகமான நடிகராக இருந்த போதும், திருவனந்தபுரத்தில் எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையாக இருந்தவர்.

வங்கிக்குச் சென்று செக் மாற்றுவது, அஞ்சல் அலுவகத்துக்குச் செல்வது போன்ற பணிகளைத் தானே செய்வார். ஸ்கூட்டர் வாங்கும் முன் நகரப் பஸ்சில் பயணம் செய்தவர். தன் மகளைப் பள்ளியில் சேர்க்கச் சென்றவர் விண்ணப்பத்தில் ’தொழில் நாடகக் கலைஞன்’ என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்து ’இப்போது சினிமாவிற்கு வந்துவிட்டீர்களே’ என்று கேட்தற்கு ’நாடக நடிப்புதான் என் பிழைப்பு. நாளை சினிமா வாய்ப்புகள் இல்லாது போனால் என் நிரந்தரத் தொழிலான நாடகத்துக்குப் போய்விடுவேன்’ என்றவர், திரைத்துறையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துத் தனியிடம் பெற்றவர். 3 படங்களுக்குக் கதை, வசனம், ஒரு படம் டைரக்‌ஷன் எனத் தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

அய்யப்பப் பணிக்கர், கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் போன்ற  கவிஞர்களின் கவிதைகளை அவர் சொல்லும் பாங்கு கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தையே அளிக்கும். இந்த இலக்கிய ஈடுபாடுதான் அவரை திரைக்கதை எழுத்தாளராக்கியது.

மூன்று தேசிய விருது பல மாநில விருதுகள் வாங்கியவர். ஓர் ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார்.

கலைப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவரைப் புனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த விருந்தினராகக் கிரிஷ் கர்னாட் அழைத்தபோது வேணு சொன்ன பதில்: “ எனக்கு நடிக்கத்தான் தெரியும்; சொல்லிக்கொடுக்கத் தெரியாது”

ஒரு படத்தில் வேணு ஏற்றிருந்த பாத்திரம் இறந்த நிலையில் கால் நீட்டிக் கிடப்பதாகக் காட்சி. காட்சி படமாக்கப்படும் வரை அசையாமல் கிடந்தார். காட்சி முடிந்ததும் சிரித்துக்கொண்டே எழுந்தார்.  ‘அசையாமல் படுத்துக் கிடப்பதைச் சுலபமாக நடித்துவிடலாம், இல்லையா?’ என்று ஒரு நண்பர் குறிப்பிட்டார். ‘இல்லை… அதுவும் சிரமமானதுதான். சும்மா கட்டைபோலக் கிடப்பதல்ல நடிப்பு. அந்தப் பாத்திரம் இறக்கும்போது என்ன மனநிலையில் இருந்தது என்பதையும் நடிகன் முகத்தில் காட்ட வேண்டும். நிம்மதியான சுக வாழ்க்கை நடத்தியவரென்றால் சிரித்த முகமாக இறந்திருப்பார். கடன்பட்டு நொந்துபோனவரானால் அந்தச் சலிப்பும், நோயாளியாக இருந்தால் அந்த வாதையும் முகத்தில் தென்படும். அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’ என்று பதில் சொன்னார் வேணு.

குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நெடுமுடி வேணுவுக்குத் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.

’மோக முள்’ளில் தான் ஜானகிராமன் உயிரும் உடலுமாகக் கற்பனை செய்த ’ரங்கண்ணா’ வேடத்துக்கு, வேணுவைத் தவிர பொருத்தமான இன்னொரு நடிகர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

கடைசியாகத் தமிழில் வேணு  ’நவரசா’ இணையத் தொடரில் நடித்திருந்தார், தமிழில் வெளிவர இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வந்த சூப்பர் ஹிட்டான ’இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் ’கிருஷ்ணசாமி’ என்ற போலிஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்தது பரவலாகப் பேசப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருக்கிறார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ‘காலகமுடி’ பத்திரிகையில் செய்தியாளராகப் பணிபுரிந்தானாலோ என்னவோ பத்திரிகைக்காரிகளிடம் தனி மதிப்பு. எளிதாக எந்தப் பத்திரிகையாளரும் அவரிடம் போனில் பேசலாம்.

தென்னிந்தியக் கலையுலகம் ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டது.

1 COMMENT

  1. நெ டுமுடி வேணுவின் இறப்பு திரையுலக
    ரசிகர் களுக்கு பேரிழப்பு .அவரின் நடிப்புக்கு சான்றாக வி ே னாத் தெரிவித்துள்ள தத்ரூப இறந்தவர் ே பால் நடித்த காட்சிக்கு வேணுவின் விளக்கம் சரியானது.சிறப்புக்குரியதாகும்.
    து.சே ரன்
    ஆலங்குளம்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...