0,00 INR

No products in the cart.

பலே பாங்காக்!

பயணம்

– ஸ்வர்ணலதா, பெங்களூரு.

தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக்குக்கு குடும்பத்தினருடன் பயணம் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மத்திய தாய்லாந்தின் சாவோபிரயா ஆற்றுப்படுகையில் 1,568.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள பாங்காக்கின் சுற்றுப்புறப் பகுதிகளையும் சேர்த்து 14 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.இங்கு இரண்டு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன. ஒன்று சுவர்ணபுரி; மற்றொன்று டான்மியங். பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தலைமையகங்களை பாங்காக்கில் நிறுவியதால் இது மிக முக்கிய வர்த்தக மையமாக விளங்குகிறது.

விலையுயர்ந்த முத்து, பவளம், மரகதம் போன்ற ரத்தினக் கற்கள் மற்றும் தங்கத் தகடுகளினால் அலங்கரிக்கப்பட்ட சுமார் 400 புத்தர் கோயில்கள் இங்கு உள்ளன. இரண்டு கிலோ மீட்டர் அளவுக்கு விரிந்து பரந்துள்ள மாபெரும் அரண்மனை பாங்காக்கின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 1782ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அரண்மனையில் அரசு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

Wat Phra kaew என்னும் புனிதமான மரகத புத்தர் கோயில், அரண்மனை வளாகத்தினுள் அமைந்துள்ளது. 1434ஆம் ஆண்டு சியாங்ராய் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையை இங்கு ஸ்தாபித்துள்ளனர். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே தாய்லாந்தின் அரசர் இந்த புத்தருக்கு ஆடை மற்றும் ஆபரணங்களை மாற்றி அணிவிப்பார். மரகத புத்தர் கோயில் முழுவதும் தங்கத் தகடுகளால் வேயப்பட்டு உயர்தரமான வண்ணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரண்மனை வளாகத்தில் கம்போடியா நகரின் அங்கோர் வாட் கோயில் மாடல், ராணி சிரிகிட் கைத்தறிக் கண்காட்சி மையம், புத்த பிட்சுகளின் தங்கும் விடுதி மற்றும் ஏகப்பட்ட கலைக் கண்காட்சி அரங்கங்கள் உள்ளன. அரண்மனையின் வெளிச்சுவர் முழுவதும் ராமாயணக் காவியத்தை நினைவூட்டும் வகையில் மியூரல் வண்ணங்களால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

வாத் ஃபோ (Wat Pho) என்னும் தங்க முலாம் பூசிய புத்தர் சிலை சயனக் கோலத்தில் காட்சி தருகிறது. இந்த ஊரில் உள்ள கால்வாய்களில் மிதக்கும் சந்தைகள் இருப்பதால், ‘கிழக்கின் வெனிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. படகில் சவாரி செய்தபடியே நாம் விரும்பும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுகளையும் வாங்கி மகிழலாம்.

காஞ்சனபுரி என்னும் நகரம் 123 கி.மீ. தொலைவில் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்நகரம் கிவே நோய், கிவே யாய் ஆகிய ஆறுகள் மே கிளாங் (Mae klong) ஆற்றுடன் சேரும் இடத்தில் அமைந்துள்ளது. இங்கு புலி கோயில், புலிகள் சரணாலயம், தூங்கும் ரயில் நிலையம், வரலாற்று தேசியப் பூங்கா, கிமெர் கோயில் மற்றும் பல நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை தன்வசம் ஈர்க்கின்றன.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹவாய் நதியின் மேல் ரயில்வே பிரிட்ஜ் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 6,982 கைதிகள் (Allied Prisoners of war) இறந்ததன் நினைவாக அங்கு போர் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. அன்றிலிருந்து இது, ‘தூங்கும் ரயில் நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கருத்தை மையப்படுத்தி டேவிட் லியான் என்பவர் 1957ஆம் ஆண்டு, ‘The Bridge over the river kwai’ என்னும் ஆங்கிலப் படத்தை இயக்கியுள்ளார்.

புலி கோயிலில் ஏகப்பட்ட புலிகளும், புலிக் குட்டிகளும் உள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் நாம் சென்று குட்டிகளுடன் கொஞ்சி விளையாடி, உணவு ஊட்டி விடலாம். மற்றும் புலிகளின் அருகே உட்கார்ந்து புகைப்படமும் எடுத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பக்… பக்… பயமும், நிறையவே திக்… திக்… திகிலுடன் நானும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

பாங்காக் மற்றும் கம்போடியா வரை செல்லும் கடல்வழிப் பாதைகளை இணைக்கும் சாலை சுகும்விட் (Sukhumvit) வழியாக 97 கி.மீ. தூரத்தில் பட்டாயா (Pattaya) சென்றோம். இங்கு ஏகப்பட்ட ஹோட்டல்களும், இரவு விடுதிகளும் உள்ளன. கடலோரப் பகுதியான பட்டாயா வெளிநாட்டவர்கள் விரும்பி வரும் ஒரு சுற்றுலா பீச் பகுதியாகும். இங்கு அலைகளில் சவாரி, படகு ஓட்டுவது மற்றும் பாரா செய்லிங் செய்கிறார்கள்.

இங்கு, ஸ்ரீரச்சா புலிகள் சரணாலயம், பாட்டில் ஆர்ட் மியூசியம், கோரல் தீவு, முதலைகள் சரணாலயம், யானைகள் கிராமம், சியாம் சென்டர், நூங் நூச் தோட்டம், ரிப்ளைஸ் நம்பினால் நம்புங்கள் த்ரில் மியூசியம், கடலுக்குள் அனுபவம், பறக்கும் ரயில், டிப்பானிஸ் போன்ற ஏகப்பட்ட சுற்றுலா மையங்கள் பிரமிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

பட்டாயாவில் விலை உயர்ந்த ரத்தினக் கற்கள் கண்காட்சி மையம் உள்ளது. பாங்காக்கில் அமைந்துள்ள பாம்புப் பண்ணை உலகத்திலேயே இரண்டாவது பெரிய பாம்புப் பண்ணையாக விளங்குகிறது. இங்கு கொடிய விஷமுள்ள பாம்புகளும் இருக்கின்றன. தினமும் காலை 11 மணியளவில் பாம்பின் வாயிலிருந்து விஷம் எடுக்கும் விதம் பற்றிக் காண்பிக்கப்படுகிறது. மாலை 4 மணியளவில் மலைப்பாம்பு, நாகப் பாம்புகள் சுதந்திரமாக உலா வருவதைப் பார்க்கலாம்.

ஊதாங் (Uthong) என்ற அரசரால் 1350ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட நகரம் அயூத்தியா. 1767ம் ஆண்டு இந்நகரம் பர்மியர்களால் அழிக்கப்பட்டது. இது தாய்லாந்தின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இந்த ராஜ்ஜியத்தின் பல கோபுரக் கட்டுமானங்கள் இடிந்து சிதிலமடைந்துள்ளன. இங்கு வாட் மஹாதத் என்ற உயர்தரமான புத்தர் கோயில் இருந்தது. இந்தியக் கோயில்கள் போல கோபுரங்கள், கலசங்கள், சுதை வடிவங்கள், படிமங்கள் மற்றும் உச்சியில் கூம்பு வடிவமாக இருந்ததால், இது இடிதாங்கியாகவும் செயல்பட்டது.

ங்குள்ள Wat Yai chaya Mong khon என்ற புகழ்பெற்ற கோயில் பல படிக்கட்டுகளைக் கொண்டது. உள்ளே பெரிய புத்தர் சிலை உள்ளது. இதன் உயரமான ஸ்தூபி நாரஸன் என்ற அரசர் பர்மிய இளவரசரை போரில் வென்றதற்கான வெற்றியைக் குறிக்கிறது. ஆனால், சில இடங்களில் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி நான்கு பக்கமும் புத்தர் சிலைகள் வரிசையாக உள்ளன.

அயூத்தியா நகரில் உள்ள Wat Mahathat புத்தர் கோயிலில் ஒரு அதிசயத்தைப் பார்த்தோம். 1767ம் ஆண்டு பர்மியர்களால் இந்நகரம் அழிக்கப்பட்டது. இங்கிருந்த எல்லா புத்தர் சிலைகளின் (கல்லினால் ஆனது) தலைகளும் உடைத்துத் தூக்கியெறியப்பட்டன. அப்போது ஒரு புத்தர் தலை மட்டும் தாங்கு வேர்கள் நிறைந்த போதி மரத்தடியில் விழுந்ததாம். புத்தரின் தலையைத் தாங்கியபடி வேர்கள் சுற்றி வளர்ந்திருக்கின்றன. இங்கு புகைப்படம் எடுக்கும்போது மண்டியிட்டோ அமர்ந்தோ எடுக்க வேண்டும் என அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.

இந்தக் கோயிலை முன்னோர்களும் துறவிகளும், ஆரண்யவாசிகளாக வாழ்ந்து (Forest tradition) தியானத்தையும், வேதத்தையும், தர்மத்தையும் போதித்து புத்த மதப் பல்கலைக்கழகமாகச் செயல்படுத்தி வந்தனர். புதிய அயூத்தியா நகரம் கிழக்குப் பக்கமாக அமைக்கப்பெற்று சகலவித நாகரிக வளர்ச்சியுடன் உள்ளது.

தாய்லாந்து, பதும் மாவட்டத்தில் 1956ம் ஆண்டு பிரம்மாவுக்கு தனிக் கோயில் அமைக்கப்பட்டது. இத்தாலி நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலை, எராவன் கோயில் என்று அழைக்கிறார்கள்.

கோயிலைச் சுற்றி வணிக வளாகம் மற்றும் அரங்கங்கள் உள்ளன. உயரமான மேடையில் பிரம்மாவை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். பிரம்மாவுக்கு தங்க அங்கி சாற்றி சுற்றிலும் உயர்தரமான ரத்தினக் கற்கள் கொண்டு அலங்கரித்து உள்ளனர்.
இங்குள்ள மக்கள் இவருக்கு ஊதுபத்தி மற்றும் பூங்கொத்துக்களை வைத்து மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார்கள். பாரம்பரிய உடையணிந்த பெண்களின் நடனத்தையும் இங்கே பார்க்கலாம். திருமூர்த்தி, லக்குமி, விநாயகர், இந்திரன், திருமால், கருடன் போன்ற தெய்வங்களுக்கும் இங்கே தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.

பாங்காக் நகரில் எங்கு பார்த்தாலும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களும், மசாஜ் நிலையங்களும் நிறைய உள்ளன. நம் நாட்டு உணவு வகைகளுக்குப் பஞ்சமே இல்லை. சுற்றுலா இடங்களுக்குச் சென்று வர ஆட்டோக்கள், பஸ், டாக்ஸி, ரயில் வசதியுள்ளது.

புராதனச் சின்னங்கள், கலை ஓவியங்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் எண்ணற்ற புத்தர் சிலைகள் ஜொலிக்கும் அழகைப் பார்ப்பதற்கு பாங்காக்கிற்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும்.

இந்தப் பயணக்கட்டுரை மங்கையர் மலர் டிசம்பர் 1-15, 2016 இதழில் வெளியானது.

அன்பு வாசகீஸ்!
இது போன்ற உங்களது அருமையான பயண அனுபவங்களை
மறக்க முடியாத அந்த நாட்களை,
நமது மங்கையர் மலர் ஆன்லைனில் பிரசுரிக்க
kalkionline.com ல் மென்பேனா வழியாக மங்கையர் மலருக்கு எழுதி, புகைப்படங்களுடன் இணைத்து உடனடியா அனுப்புங்க.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

கவிதைத் தூறல்!

0
-பி.சி. ரகு, விழுப்புரம்   விலைவாசி! எவரெஸ்ட் சிகரத்தை விட எல்.ஐ.சி., பில்டிங்கை விட அரசியல்வாதிகளின் கட்-அவுட்களை விட உயர்ந்து நிற்கிறது விலைவாசி! **************************************** முதிர்கன்னியின் வேண்டுகோள்! தென்றலே என் மீது வீசாதே! தேதிகளே என் வயதை நினைவுபடுத்தாதே! பூக்களே எனக்கு மட்டும் வாசம் தராதீர்கள் புதுமணத் தம்பதிகளே என் கண்ணுக்குள் சிக்காதீர்கள்... குறைந்த விலையில் எனக்கொரு மாப்பிள்ளை கிடைக்கும் வரை. **************************************** பாவம்! வீடு கட்ட மரம்...

பலவித பச்சடி ; பலரகப் பொடி!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! ரெசிபிஸ்!   முருங்கைப் பூ பச்சடி தேவை: முருங்கைப் பூ – 2 கப், துவரம் பருப்பு – 100 கிராம், தேங்காய் – 1, காய்ந்த மிளகாய் – 4, உளுந்தம் பருப்பு –...

ஐகோர்ட்டில் முதல் முறையாக பெண் தபேதார் நியமனம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! சென்னை ஐகோர்ட் வரலாற்றில் முதல்முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் தங்கள் அறையில் இருந்து கோர்ட் அறைக்கு வரும்போது அவர்களுக்கு முன் தபேதார் என்பவர் கையில் செங்கோலுடன் வருவது காலம் காலமாக...

மலர் மருத்துவம்!

0
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க! மங்கையர் மலர்  வாசகீஸ் FB பகிர்வு!  மல்லிகைப் பூக்களை இரவில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த நீரால் முகம் கழுவினால் முகம் எந்த மாசும் இ‌ல்லாம‌ல் முகம் பொலிவு பெறும். எருக்கன்...

ஜோக்ஸ்!

0
 -வி. ரேவதி, தஞ்சை படங்கள்; பிள்ளை   "மொய் வசூல் முடிந்த கையோடு தலைவரை பேசச் சொல்லிட்டாங்க...! "    " கூட்டத்தை விரட்டி அடிக்க அருமையான ஏற்பாடா இருக்கே!   *******************************           ...