
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக 'கர்ணன்' தேர்வாகியுள்ளது.
கலைப்புலி S தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் கர்ணன். இப்படத்தில் யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.
இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகி, பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. நேற்று முன்தினம் அதன் நிறைவு விழாவில் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கர்ணன் பெற்றது. விருது பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜூக்கு பலரும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.