பில்கேட்ஸ் மகள் பிரமாண்ட திருமணம்: வைரல் போட்டோஸ்!

பில்கேட்ஸ் மகள் பிரமாண்ட திருமணம்: வைரல் போட்டோஸ்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

உலகப்பணக்காரர்களில் ஒருவரான பிட்கேஸின் மகள் ஜெனிபர், தன்னுடைய திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

பில்கேட்ஸூக்கும் அவரது மனைவி மெலிண்டாவுக்கும் சமீபத்தில் விவாகரத்தானது. இந்நிலையில் அவர்களின் மகள் ஜெனிபரின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்லனர். ஜெனிபர் கேட்ஸ எகிப்து நாட்டைச்சேர்ந்த குதிரைப் பந்தய வீரரான நேயல் நாசர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நேயல் நாசர் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்துக்கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஜெனிபர் – நேயல் நாசர் ஆகியோரின் திருமணம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பண்ணையில் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 2 மில்லியன் செலவில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படத்தை ஜெனிபர் கேட்ஸ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது:

இது கொரோனா காலக்கட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்போடு திருமணம் நடைபெற்றது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள பண்ணை முழுவதும் கூடாரங்கள் அமைத்து , மலர்களால் வழி நெடுகிலும் வரவேற்புகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த திருமண விழாவில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்துக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியப்பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.

–இவ்வாறு ஜெனிபர் தெரிவித்துள்ளார். மேலும் இத்திருமணத்தின் போது நாட்டுப்புற இசைக்கச்சேரி மற்றும் விருந்துகள் களைக்கட்டியதாம். இவர் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com