0,00 INR

No products in the cart.

பில்கேட்ஸ் மகள் பிரமாண்ட திருமணம்: வைரல் போட்டோஸ்!

உலகப்பணக்காரர்களில் ஒருவரான பிட்கேஸின் மகள் ஜெனிபர், தன்னுடைய திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்இதற்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

பில்கேட்ஸூக்கும் அவரது மனைவி மெலிண்டாவுக்கும் சமீபத்தில் விவாகரத்தானது. இந்நிலையில் அவர்களின் மகள் ஜெனிபரின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்லனர். ஜெனிபர் கேட்ஸ எகிப்து நாட்டைச்சேர்ந்த குதிரைப் பந்தய வீரரான நேயல் நாசர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நேயல் நாசர் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எகிப்து சார்பில் கலந்துக்கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஜெனிபர் நேயல் நாசர் ஆகியோரின் திருமணம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பண்ணையில் சிறப்பாக நடைபெற்றது.

சுமார் 2 மில்லியன் செலவில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படத்தை ஜெனிபர் கேட்ஸ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது:

இது கொரோனா காலக்கட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்போடு திருமணம் நடைபெற்றது. 100 ஏக்கர் பரப்பில் உள்ள பண்ணை முழுவதும் கூடாரங்கள் அமைத்து , மலர்களால் வழி நெடுகிலும் வரவேற்புகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த திருமண விழாவில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்துக்கொண்டார்கள். அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியப்பிறகே அனுமதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு ஜெனிபர் தெரிவித்துள்ளார். மேலும் இத்திருமணத்தின் போது நாட்டுப்புற இசைக்கச்சேரி மற்றும் விருந்துகள் களைக்கட்டியதாம். இவர் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

3D தொழில்நுட்பத்தில் விக்ராந்த் ரோனா!

0
-ராகவ் குமார். நான் ஈ படத்தின் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப், இப்போது ஹீரோவாக மிரட்டியுள்ள படம் விக்ராந்த் ரோனா!  பிரம்மாண்டாமான பொருள் செலவில்ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 3 D தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம்...

நாதிரு தின்னா.. நாதிரு தின்னா!

0
-லதானந்த் நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கும் படம் ‘நாதிரு தின்னா’! படத்தின் இயக்குனாராக மட்டுமல்ல.. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடனப்பயிற்சி என அனைத்தும் சுவர்ணா மேற்கொண்டிருகிறார். இவர் நடன அமைப்பாளராக 300க்கும் மேற்பட்ட...

இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!

0
 - ஜிக்கன்னு. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ படம் ஒரு ரொமாண்டிக்...

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...