பூமிக்கு அருகே விரையும் சிறு கோள்: நாசா எச்சரிக்கை!

பூமிக்கு அருகே விரையும் சிறு கோள்: நாசா எச்சரிக்கை!

வீர ராகவன்

பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று விரைந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இதுகுறீத்து விடுத்துள்ள எச்சரிக்கை;

சமீபத்தில் பூமியின் அருகே மூன்று பெரிய ஆஸ்டிராய்டுகள் கடந்து சென்றது. இந்நிலையில் மற்றொரு ஆபத்தான ஆஸ்டிராய்டு பூமியைக் நோக்கி விரைந்து வருகிறது. கடந்த 1994ல் ஆஸ்திரேலியா விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட 1994 WR12 என்ற ஆஸ்டிராய்டு தான் இப்படி பூமியைத் தாக்கும் வகையில் வேகமாக வருகிறது. இது கால்பந்து மைதானத்தை விட பெரியது. இப்போதைய நிலையில் இது, பூமியிலிருந்து சுமார் 20 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த ஆஸ்டிராய்டு அதன் பாதையில் ஒரு சிறிய அளவில் விலகினாலும் கூட, பூமிக்கு பெரும் ஆபத்தாக முடியும். முன்னர் டைனோசர்கள் அழிந்ததைப் போல, பெரும் கேடு நேரிடும் என நாசா எச்சரித்துள்ளது.

ஆனால், இத்தகைய பிரமாண்ட ஆஸ்டிராய்டுகள் பூமியைத் தாக்குவது 6 லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அபூர்வமாக நிகழும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com