ஜோக்ஸ்
ரெண்டும் வேற வேற ஜோடியா போச்சு!
வாசகர் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி
“பயந்துக்கிட்டே செய்யிற காரியம் எதுவும் உருப்படாதுங்கறது சரியாப்போச்சு!”
“எதை வைச்சுச் சொல்ற?”
“மண்டபத்துல பயந்துக்கிட்டே எடுத்த செருப்பு ரெண்டும் வேற வேற ஜோடியா போச்சு!”
“அந்த டாக்டருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்!”
“எப்படிச் சொல்றீங்க?"
“ஆபரேஷனை நினைத்துதானே பயப்படறீங்க, என்னை நினைத்து இல்லையே?ன்னு கேட்டாரே!"
"ராணியைக் கவர்ந்து செல்ல வந்த எதிரி மன்னன், பணிப்பெண் பத்மாவைக் கவர்ந்து சென்றுவிட்டான் மன்னா?"
"ஓ… பணிப்பெண், அவனைக் கவர்ந்திருப்பாளோ..?"
"நானும் முட்டி மோதி மெதுவா ஒரு கதையை எழுதி முடிச்சிட்டேன்; என்ன டைட்டில் வைக்கலாம்னு சொல்லுங்க...?"
"குட்டிச்சுவர்' னு வச்சா சரியா இருக்கும்னு தோணுது...!"
"இந்த ஊர்ல இருந்த ஆசிரமத்தை ஏன் மூடிட்டாங்க?"
"லேடீஸ் யாரும் வராமல் சாமியார் நொடித்துப் போயிட்டாராம்..!"
- வி.ரேவதி, தஞ்சை