0,00 INR

No products in the cart.

பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை பந்தாடிய வீரர் கைது!

பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரை காலால் உதைத்து தாக்கிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து தொடர் நடந்தது. இந்த தொடரில் நேற்று சா பாலோ என்ற அணியும், குவாரணி என்ற அணியும் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வில்லியம் ரிபிரோ என்ற வீரருக்கு நடுவராக இருந்த ரோட்ரிகோ கிரிவெல்லரோ என்பவர் ஃப்ரீ கிக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் கோபமடைந்த வில்லியம் ரிபிரோ அந்த நடுவரை தலையால் முட்டி கீழே தள்ளிவிட்டார். மேலும் தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் படுகாயம் அடைந்த நடுவர் து மயங்கி சரிய, சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போட்டியை நிறுத்திவிட்டு, ஸ்ட்ரெச்சரை கொண்டு வருமாறு சைகை செய்தனர். இதனால் போட்டி 14 நிமிடம் நிறுத்தப்பட்டது.

தாக்குதலில் காயம் அடைந்த நடுவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதனை அடுத்து வில்லியம் ரிபிரோ என்ற வீரரை போலீசார் கைது செய்து, கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாண்டில் 113வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சாவ் பாவ்லோ விளையாட்டு மன்றம், இந்த சம்பவத்தை துயரம் மிகுந்த நாளாககுறிப்பிட்டுள்ளது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

இளைஞர் வாழ்வுதனை கவ்வும் ஆன்லைன் சூதாட்டம்! 

0
-தனுஜா ஜெயராமன்    மகாபாரதத்திலேயே சூதினால் பஞ்ச பாண்டவர்கள் இழந்தது ஏராளம் எனில் சூதின் கொடுமைகளை இதைவிட விளக்கமாக யாராலும் சொல்லிவிட முடியாது.   சீட்டாட்டம் ,குதிரைபந்தையம், லாட்டரி சீட்டுகள்  என பல்வேறு காலகட்டங்களில் வாழ்க்கையை சீரழிக்கும் பல...

பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸார் கைது! 

0
டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டதில், நாடு முழுவதும்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி...

சினிமா டப்பிங் கலைஞர்கள் நடத்திய கிரிக்கெட் போட்டி! 

0
-லதானந்த்   தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கலைஞர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் (SICTADAU) டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் பிரீமியர் லீக்  (DPL) SICTADAU கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில்...

சதுரங்கத்தில் வென்று சக்தியை மணந்த ஈசன்!

0
-பிரமோதா, சக்தி.சாமிநாதன். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை 28) நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்குகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது ‘’தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூவனூர் சதுரங்க...

சிவரஞ்சனியும் லஷ்மி பிரியாவும்!

0
-தனுஜா ஜெயராமன். இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகளில்  தமிழ்படங்கள் மட்டுமே ஒன்பது விருதுகளை வென்றுள்ளது மகிழ்ச்சியான சேதி! கொரானாவால் சற்று தொய்வடைந்திருக்கும் தமிழ்த் திரையுலகுக்கு இந்த விருதுகள் நம்பிக்கையும் உற்சாகமும் தருகின்றன.   "சிவரஞ்சனியும்...