#BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு!

#BREAKING: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.. ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதல்வர் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன் பெரும் வகையில் ந்கைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒருசில இடங்களில் முறைகேடாக நகைக்கடன் பெற்றுள்ளார்கள். அதேபோல் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நடைக்கடன் வாங்கியுள்ளார்கள். இதெல்லாம் களையப்படும். உண்மையான பட்டியல் ஏற்கனவே சேகரிப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்பது தொடர்பான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார். திமுக தேர்தல் வாக்குறுதியில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com