#BREAKING: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!

#BREAKING: பிரபல கிரிக்கெட் வீரருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி!
Published on

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை லாகூரில் உள்ள தனது இல்லத்தில் இருந்த இன்சமாமுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்துயாவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அவர் விரைவில் நலம்பெற கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

51 வயதான இன்சமாம் உல் ஹக் கேப்டனாக தான் ஆடிய 81 போட்டிகளில் 51 போட்டிகளை பாகிஸ்தானுக்காக வென்று கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக 20,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரரும்கூட! இன்சமாம் கோபக்காரரும் கூட. ஒரு முறை இந்திய ரசிகர் தன்னை இழிவாக பேசி விட்டார் என்பதற்காக கேலரிக்குள் புகுந்து அவரை பேட்டால் அடிக்கப்போன சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com