#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஓசூரில் காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தஅ.தி.மு.க. ஆட்சியில் அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஜாமின் வழங்க கோரி ராஜேந்திர பாலாஜியின் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம்அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவர் ஜாமீன் கோரி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் அவருக்கு நெருக்கமானவர்களிடமும் போலீசார் விசாரித்து வந்தனர். அவரைத் தேடி தனிப்படை டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியையும் அவரது உதவியாளரையும் போலீஸார் ஓசூரில் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com