#Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு!

#Breaking: அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறை பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள்

எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்கள் என்ற வகையில் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணீ பதவியில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com