#Breaking: ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி!

#Breaking: ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் ராணுவ தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் அவரது மனைவி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராணுவ தளபதி உட்பட 14 பேர் வெல்லிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற போது, வெலிங்டன் பயிற்சி கல்லூரியில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த Mi – 17 V5 வகை ஹெலிகாப்டரில், முப்படைத் தலைமை தளபதி, அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள், எல்.எஸ். லிட்டர், ஹர்ஜிந்தர் சிங் உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால் சுமார் ஒரு மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் இருந்து டாக்டர்கள் குழு குன்னூருக்கு விரைகிறது.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:
இந்திய விமானப்படையின் Mi – 17 V5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 9 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
_ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திலையில் ம முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com