#BREAKING: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கிய பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

#BREAKING: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கிய பேரறிவாளனுக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இன்று பேரறிவாளனுக்கு  ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ரம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு, சுமார் 32 ஆண்டுகளாக சிறையிலுள்ளனர்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியமைத்ததும் இந்த 7 பேரையும் விடுதலை செய்யும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினர். ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் உள்துறை மூலம் தமிழக ஆளுநரின் அறிக்கை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் கடந்த 2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதனிடையே, கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் உள்ள நிலையில், தனக்கு ஜாமீன் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பேரறிவாளன் ஜாமீன் கோரிய வழக்கின் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

அப்போது நீதிபதிகள் ''இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபரான பேரறிவாளன் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்.. ஏன் இவ்வளவு தாமதம்"[[ கேள்வி எழுப்பினர்.

அதற்கு "பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அது குடியரசு தலைவரின் அதிகாரத்துக்கு உட்பட்டது" என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விசாரணையின் இறுதியில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com