#Breaking: தமிழக உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் இன்று பதவியேற்பு!

#Breaking: தமிழக உள்ளாட்சி தேர்தலில் வென்றவர்கள் இன்று பதவியேற்பு!

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதேபோல், மீதமுள்ள 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத பதவியிடங்கள் மற்றும் காலியிடங்களுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 12-ம் தேதி நடைபெற்ரது. அதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.அதன்படி,ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர்,மாவட்ட கவுன்சிலர்கள் ,பதவியேற்று வருகின்றனர்.அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இந்த பதவியேற்பு பிரமாணம் நிகழ்வு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2320 பேர்,செங்கல்பட்டு மாவட்டத்தில் 3208 பேர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக பதவியேற்றுள்ளனர்.

மேலும்,இன்று பதவிப்பிரமாணம் எடுக்காதவர்கள் நாளை மறுநாள் (அக்டோபர் .22) நடக்கவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலில் போட்டியிடவோ,வாக்களிக்கவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com