பிரிட்னி ஸ்பியர்ஸசுக்கு 3-வது திருமணம்!

பிரிட்னி ஸ்பியர்ஸசுக்கு 3-வது திருமணம்!

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன் நீண்டநாள் காதலருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளார்.

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சுக்கு (வயது 39) உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இவர், கடந்த 2004-ம் ஆண்டு தனது நண்பர் ஜேசன் ஆலன் அலெக்சாண்டர் என்பவரைத் திருமணம் செய்தார். அந்த திருமணம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததையடுத்து, மூன்றே நாளீல் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது.

பிறகு, கெவின் ஃபெடர்லைன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து, 2007 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு ஒரு மியூசிக் ஆல்பம் தயாரிக்கும்போது சாம் அஸ்காரி என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் சாம் அஸ்காரி திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதையடுத்து தன் நிச்சயதார்த்த மோதிரம் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் பிரிட்னி ஸ்பியர்ஸ். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து களைத் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com