0,00 INR

No products in the cart.

பட்ஜெட் 2022; நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அறிக்கை தாக்கல்!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிமலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10-வது மத்திய பட்ஜெட் தாக்கல் இது! அதையடுத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது;

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டாக இருக்கும். கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.எந்தவித பொருளாதார சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரிசெய்து வருகிறோம்.

உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ரயில்வே, கனரக தொழில் உள்ளிட்ட 15 துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.தொழில்துறை உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்.

அடுத்த 3 ஆண்டுகளில் 4000 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். சிறு தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரயில்வே துறையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்.

நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவுபடுத்தப்படும்.

-இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்; மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவிப்பு!

0
இந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்று மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. -இதுகுறித்து மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தெரிவித்ததாவது; திருக்குறளை இந்தி உட்பட 12...

கிருஷ்ண ஜென்ம பூமியிலுள்ள மசூதியில் அனுமதிக்க வேண்டும்; இந்து மகா சபா மனு தாக்கல்!

0
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் சாஹி இத்கா என்ற மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் இந்துக்கள் சென்று வழிபாடு நடத்தவும் அபிஷேகம் செய்யவும்...

IPL கிரிக்கெட் போட்டி; கடைசி இடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! 

0
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையானிந்த 15-வது சீசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டி அதன் இறுதிக்கட்டத்தை...

ஷூட்டிங்கில் விபத்து: ஆற்றில் விழுந்த காரில் சமந்தா!

0
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை  சமந்தா நடிக்கும் ‘குஷி’ தெலுங்குப் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றை காஷ்மீரில் நேற்று முந்தினம் படமாக்கினர். அப்போது அவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஆற்றில்...

குவாட் உச்சிமாநாடு: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருக்கு வரவேற்பு!

0
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற ஆன்டனி ஆல்பனேசி இன்று ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க வந்தபோது, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரேலியாவின்...