'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு'... ‘நிசான் மேக்னைட் குரோ’ எனக்குப் பிடிச்ச காரு!

நிசான் நிறுவனம், தன்னுடைய மேக்னைட் காரில் புதிய குரோ எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
Nissan Magnite KURO EDITION
Nissan Magnite KURO EDITIONImg credit-caradvice.in
Published on

ஜப்பானிய பன்னாட்டு நிறுவனமான நிசான் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமானும். இதன் தலைமையகம் ஜப்பானின் யோக்கோகாமாவில் (Yokohama) உள்ளது. இந்தியாவில், நிசான் நிறுவனம் ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து ரெனால்ட்-நிசான் கூட்டணியில் பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்கிறது. அவை நிசான், இன்பினிட்டி, நிஸ்மோ மற்றும் டாட்சன் போன்ற பிராண்டுகளின் கீழ் விற்கப்படுகின்றன.

2018-ம் ஆண்டில், நிசான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராகவும் மாறியது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 3 புதிய கார்கள் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிசான் நிறுவனம், தன்னுடைய மேக்னைட் காரில் புதிய குரோ எடிஷனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

'குரோ' என்றால் ஜப்பானிய மொழியில் கருப்பு எனப் பொருள். பெயருக்கேற்ப முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் மேக்னைட் எஸ்.யு.வி. அடிப்படையில் இந்தக் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளேயும், வெளியேயும் ஒவ்வொரு அம்சமும் நீங்கள் எப்போதுமே கண்டிராக போல்டஸ்ட் பிளாக்கில் துல்லியமாக மெருகூட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்லீக்கான ஆல்-பிளாக் எக்ஸ்டீரியர், அனைவர் கவனமும் உங்களை நோக்கியே ஆச்சரியத்துடம் திரும்பி பார்க்க வைப்பதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. XV அல்லது XV பிரீமியம் வகைகளை அடிப்படையாகக் கொண்ட மேக்னைட் வரிசையின் நடுத்தர மற்றும் உயர்நிலை வகைகளில் குரோ பதிப்பு இடம் பெற வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
கார் பிரியர்களே! டாடாவின் சூப்பர் ஆஃபர்… ஆனா இந்த டைம்குள்ள வாங்கிருங்க!
Nissan Magnite KURO EDITION

கேபின், டேஷ் போர்ட், கருப்பு ஸ்டீயரிங் வீல், கன்சோல், கூரை, முன்புற கிரில், பம்பர், அலாய் வீல்கள் என அனைத்தும் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் கருப்பு நிறம் பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே, நிசான் ‘மேக்னைட் ஃபேஸ்லிப்ட் குரோ’ வேரியண்டை விற்பனை செய்து பின்னர் அதனை நிறுத்திய நிலையில் தற்போது மீண்டும் நிசான் மேக்னைட் என்-கனெட்டா வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு மேக்னைட் குரோ மாடலை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சௌரப் வத்சா கூறுகையில், புதிய குரோ பதிப்பு, வாடிக்கையாளர்களின் மிகவும் தனித்துவமான, பிரீமியம் தோற்றமுடைய மேக்னைட்டுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் உள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரால் என்ஜின் வேரியண்ட் அதிகபட்சமாக 98 எச்.பி. பவரை வெளிப்படுத்தும். இதில் மேனுவல் அல்லது சி.வி.டி. கியர் பாக்ஸ் உள்ளது. மேலும், இது ஏற்கனவே உள்ள N-Connecta மாறுபாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டுயல் டிஜிட்டல் ஸ்கிரீன், அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ-டிம்மிங் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர், கிளைமேட் கண்ட்ரோல், பின்புற இருக்கைகளுக்கு ஏ.சி. வெண்ட்கள் உட்பட பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ESC, இழுவைக் கட்டுப்பாடு, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், பிரேக் அசிஸ்ட் மற்றும் TPMS உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட நிலையான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் உள்ளது.

இந்த காரின் தொடக்க ஷோரூம் விலை சுமார் ரூ.8.30 லட்சம் எனவும் டாப் வேரியண்டான 1.0 லிட்டர் சி.வி.டி. சுமார் ரூ.10.86 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த காருக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில் ரூ.11,000 பணம் செலுத்தி காரை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
கார் பிரியர்களுக்கு ஒரு அற்புத செய்தி: இனி ஜப்பானிய எஸ்யூவியும் உங்க பட்ஜெட்டில்!
Nissan Magnite KURO EDITION

5-ஸ்டார் குளோபல் NCAP சேஃப்டி ரேட்டிங்குடன் இந்த மேக்னைட் குரோ எடுப்பான ஸ்டைலில் உங்களுக்கு மனநிம்மதியை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com