ஆபத்தில்லாத 4 அஞ்சல் முதலீட்டுத் திட்டங்கள்!

Post office Saving scheme
Post office Saving scheme
Published on

முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டும் நபர்கள் எந்தத் திட்டம் நமக்கு ஏற்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வகையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் அஞ்சல் அலுவலகத்தில் பல முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும், அதிக ஆபத்து இல்லாத 4 திட்டங்களை இங்கே காண்போம்.

விலைவாசி நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்பது அத்தியாவசிய ஒன்றாக கருதப்படுகிறது. குடும்பச் செலவுகளை சமாளிக்க வருமானத்தின் பெரும்பகுதி காலியானாலும், முதலீட்டிற்கு ஒரு சிறிய தொகையை ஒதுக்க வேண்டியதும் அவசியமாகும். எந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் இலாபம் அதிகமாக கிடைக்கும்; வருமான வரிவிலக்கு கிடைக்கும்; ஆபத்துகள் குறைவாக இருக்கும் என பலருக்கும் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் கூட இதுவா அதுவா என்ற குழப்பம் நீடிக்கிறது. முதலீட்டிற்கு பெரும்பாலும் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களையே நம்பியுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களின் மீது மக்களுக்கு பொதுவாகவே நம்பிக்கை அதிகமாக இருக்கிறது.

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்:

அஞ்சல் அலுவலகத்தில் ஒரு நிதியாண்டுக்கு 7.4% வட்டியை அளிக்கும் மிகச் சிறந்த திட்டம் இதுவாகும். 5 ஆண்டுகளுக்கு ஒரு தொகையை முதலீடு செய்தால், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வட்டியாக கிடைக்கும். முதலீட்டு காலம் முடிந்த பிறகு உங்கள் தொகை திருப்பி அளிக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அசல் தொகையில் பிடிக்கப்படும் வரி அதாவது டிடிஎஸ் பொருந்தாது. இத்திட்டத்தில் முதலீட்டுத் தொகைக்கு வரி விலக்கும் கிடைக்காது.

அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டம்:

வங்கிகளில் இருக்கும் ஃபிக்சட் டெபாசிட்களைப் போன்றதொரு சேமிப்பு திட்டம் தான் இது. 1 முதல் 5 ஆண்டுகள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் நாம் முதலீடு செய்யலாம். ஆண்டுகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் உயரும். 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுகளுக்கு 7.0%, 3 ஆண்டுகளுக்கு 7.1%, 5 ஆண்டுகளுக்கு 7.5% என்ற அளவில் வட்டி அளிக்கப்படுகிறது. இதில் ஐந்தாண்டு டெபாசிட் திட்டத்தைத் தவிர்த்து மற்றவைக்கு வரி விலக்கு கிடைக்காது.

இதையும் படியுங்கள்:
சேமிக்கும் பழக்கம் கொண்ட இந்தியர்கள் எத்தனை % ?
Post office Saving scheme

கிசான் விகாஸ் பத்ரா:

அஞ்சல் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும் மிகச்சிறந்த சிறு சேமிப்பு திட்டம் கிசான் விகாஸ் பத்ரா. இத்திட்டத்தில் தற்போது கூட்டு வட்டியின் அடிப்படையில் ஆண்டுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இருப்பினும் இத்திட்டத்தில் நமது முதலீடுகளை வருமான வரி சட்டப் பிரிவு 80சி-யின் கீழ் வருமான வரிவிலக்கைப் பெற முடியாது.

மகிளா சம்மன் பத்திரம்:

பெண்களுக்கு ஏற்ற ஒரு முதலீட்டுத் திட்டம் மகிளா சம்மன் பத்திரத்தைக் கூறலாம். இத்திட்டத்தின் மூலம் ஒரு வருடத்திற்கு 7.5% வட்டியை நம்மால் பெற முடியும். 2 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பதால், இது ஒரு குறுகிய கால சேமிப்புத் திட்டமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com