வங்கிக் கணக்கு பேலன்ஸை உயர்த்த உதவும் 5 டிப்ஸ் இதோ!

Financial Tips
Bank Balance
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

மாதச் சம்பளம் வாங்கும் சிலர் ஒரு சிறு தொகையை வங்கிக் கணக்கிலேயே விட்டு விடுவார்கள். அவசர காலங்களில் இந்தத் தொகை நிச்சயமாக உதவும். ஆனால் சிலர் சரியான நிதித் திட்டமிடலை மேற்கெள்ள தவறி விடுகின்றனர். இதனால் வங்கிக் கணக்கில் இருக்கும் மீதிக் தொகை எப்போதும் குறைவாகவே இருக்கும். செலவுகளையும் சமாளித்து, வங்கிக் கணக்கில் பேலன்ஸ் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

அடுத்த மாதச் சம்பளம் எப்போது வரும் என நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், நிச்சயமாக எதையும் சேமிக்க முடியாது. ஏனெனில் அடுத்தடுத்த செலவுகள் உங்கள் சம்பளத்தை வெகு விரைவில் காலியாக்கி விடும். ஆகையால் சம்பளத்திற்கு ஏற்றவாறு நிதி திட்டமிடலும், சேமிப்பும் அவசியம். இப்படிச் செய்தால் மட்டுமே உங்களின் வங்கிக் கணக்கு பேலன்ஸை அதிகரிக்க முடியும்.

சேமிப்பு:

சம்பாதிக்கும் பணத்தை விரைவிலேயே செலவு செய்யும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இப்பழக்கத்தை மாற்றி மாதந்தோறும் வருமானத்தில் 20% தொகையை சேமிப்பது அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் உங்களின் மாத வருமானம் அதிகரிக்கும் போது, சேமிக்கும் தொகையும் அதிகரிக்க வேண்டியது அவசியம். அப்போது தான் உங்களின் சேமிப்பு மெல்ல மெல்ல உயரும்.

நிலையான வேலை:

சம்பளத்தை அதிகப்படுத்த மாற்று வேலையைத் தேடுவது இயல்பான ஒன்று தான். இருப்பினும், வேலை மாறும் போது சம்பளத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் வேலைக்கு சென்று வரும் தொலைவு, வரிவிதிப்புகள் மற்றும் வேலைப்பளு ஆகியவை குறித்தும் ஆராய வேண்டும். இதுமட்டுமின்றி அடிக்கடி ஏற்படும் வேலை மாற்றத்தால் உங்கள் தொழில் வாழ்க்கை பாதிக்க வாய்ப்புண்டு. ஆகையால், நிலையான வேலையும் அவசியமாகும்.

முதலீடு செய்யுங்கள்:

மாதந்தோறும் சேமித்தால் மட்டும் போதாது. சேமிக்கும் பணத்தை முதலீடு செய்தால் தான் உங்கள் சேமிப்பு பன்மடங்கு பெருகும். சந்தையில் பல முதலீட்டுத் திட்டங்கள் இருப்பதால், உங்களது வருமானத்திற்கு ஏற்ற முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஒருவேளை இதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால், நிதி ஆலோசகரிடம் அறிவுரை கேட்கலாம்.

இதையும் படியுங்கள்:
முதலீட்டை விட முதலீடு செய்யும் நேரம் தான் முக்கியம்! ஏன் தெரியுமா?
Financial Tips

வரி செலுத்துதல்:

நீங்கள் ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்பவராக இருந்தால், காலக்கெடு முடிவதற்குள் செலுத்தி விடுங்கள். காலம் தாழ்த்தினால் அபராதம் செலுத்த வேண்டி வரும். இது உங்களுடைய சேமிப்பையும் பாதிக்கும்.

கிரெடிட் கார்டை கையாளுதல்:

இன்றைய காலகட்டத்தில் பல வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கிரெடிட் கார்டுகளை மிக எளிதாக வழங்குகின்றன. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பலரும் அதிகமாக செலவழித்து விடுகின்றனர். இது கடனுக்கு வழிவகுக்கும். ஆகையால் தேவை ஏற்பட்டால் மட்டும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். மேலும் கிரெடிட் கார்டு பில்களை காலக்கெடுவிற்குள் செலுத்தி விடுங்கள்‌. இல்லையெனில் அதிகமாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும்‌‌.

மேற்கண்ட டிப்ஸ்களை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் வங்கிக் கணக்கு பேலன்ஸ் மட்டுமல்ல, முதலீட்டு முதிர்வுத் தொகையும் உயரும். ஆகையால் பணத்தை செலவழிக்கும் போதும், முதலீடு செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com