மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

6 financial mistakes salaried person make
6 financial mistakes salaried person make
Published on

இந்த உலகில் ஒரு தொழில் செய்து பணம் சம்பாதிப்பவர்களை விட, மாதச் சம்பளம் வாங்குபவர்களே அதிகம். இவர்கள் தங்களது பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாத காரணத்தால், நிதி நெருக்கடியை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பணத்தை எப்படி செலவழிப்பது? எப்படி சேமிப்பது? என்பது குறித்து அவர்களுக்கு போதுமான தெளிவு இல்லாமல் இருப்பதுதான். இந்தப் பதிவில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் பொதுவாக செய்யும் 6 நிதித்தவறுகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். 

  1. தவறான எண்ணங்கள்: பணத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் பலரின் நிதி நிலையை பாதிக்கின்றன. பலருக்கு அதிகமாக சம்பாதித்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் இருக்கும்.‌ ஆனால், பணம் மட்டுமே எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்ல. பணத்தை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதுதான் முக்கியம். 

  2. தவறான செலவுகள்: சம்பளம் வாங்குபவர்கள் முறையாக திட்டமிடாமல் தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள்.‌ இதனால், மாத இறுதியில் பணம் இல்லாமல் தவிக்க நேரிடும். எனவே, ஒவ்வொரு மாதமும் என்னென்ன செலவுகள் வரும் என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு, ஒரு பட்ஜெட் தயாரித்து அதன்படி செலவழிக்க வேண்டும்.‌

  3. கடன் சுமை: கடன் வாங்குவது தவறில்லை, ஆனால் தேவையற்ற பொருட்களுக்காக கடன் வாங்குவது நிதிச் சிக்கலுக்கு வழிவகுக்கும். கடனை அடைக்க போதுமான வருமானம் இல்லாமல் போனால், கடன் சுமை அதிகரித்துவிடும். எனவே, கடன் வாங்குவதற்கு முன்பு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.‌ 

  4. அவசரகால நிதியின்மை: அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவசர நிதியாக ஒதுக்கி வைக்க வேண்டும். இது எதிர்பாராத செலவுகள் ஏற்படும் போது நமக்கு உதவியாக இருக்கும். 

  5. முதலீடு செய்யாதது: சம்பாதிக்கும் பணத்தை முழுமையாக செலவழித்துவிடாமல், அதில் ஒரு பகுதியை முதலீடு செய்ய வேண்டும். இது எதிர்காலத்தில் நமக்கு நல்ல வருமானத்தைத் தரும். 

  6. காப்பீடு இல்லாமை: உடல் நலம், விபத்து போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும்போது காப்பீடு நமக்கு பெரும் உதவியாக இருக்கும். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் போதுமான காப்பீட்டு பாலிசிகளை எடுத்து வைப்பது அவசியம்.‌

இதையும் படியுங்கள்:
Personal Finance: நிதி மேலாண்மைக்கான 4 படிகள்! 
6 financial mistakes salaried person make

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மேற்கண்ட நிதித் தவறுகளைத் தவிர்த்து, சரியான நிதித் திட்டமிடலை மேற்கொண்டால், எதிர்காலத்தில் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்.‌ நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு சரியான நிதி ஆலோசகரை அணுகி, ஆலோசனை பெறுவது நல்லது. நிதி ஆலோசகர் நமது நிதி நிலையை ஆய்வு செய்து, நமக்கு ஏற்ற நிதித் திட்டங்களைப் பரிந்துரைப்பார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com