
மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவரா நீங்க? சம்பளம் வந்ததும், செலவுகள் வரிசைகட்டி நிக்குதா? மாதக் கடைசியில், அடுத்த மாதச் சம்பளத்தை எதிர்பார்த்து காத்திருக்கீங்களா? அப்போ இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!
இன்றைய வேகமான உலகத்தில், மாதச் சம்பளத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துவது என்பது சுவர் மேல ஏறும் பல்லி மாதிரிதான். எப்ப வேணும்னாலும் கீழே விழலாம். ஏன் தெரியுமா?
நீங்க ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறீர்கள் என்றால், அங்கு வேலை பாதுகாப்பு, நிதிப் பாதுகாப்பு எல்லாம் உங்கள் திறமையையும் அனுபவத்தையும் பொறுத்தது. எப்ப என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், வெறும் சம்பளத்தை மட்டும் நம்பி இருக்காதீங்க.
கூடுதல் வருமானம் இருக்கும்போதுதான் நிம்மதியாக வாழ முடியும். அது உங்கள் சேமிப்பையும் முதலீட்டையும் அதிகரிக்கும். திடீரென விலைவாசி ஏறினாலும் சமாளிக்க முடியும். உங்க கனவுகள், ஆசைகள், தொழில் தொடங்கும் எண்ணம் என எல்லாவற்றையும் இந்தக் கூடுதல் வருமானம் ஈஸியா நிறைவேற்றும்.
சரி, எப்படி கூடுதல் வருமானம் ஈட்டுவது எனப் பார்க்கலாம்.
உங்களுக்காகவே 7R ஸ்மார்ட் வழிகள்:
1. Rate (Business Income):
நீங்க செய்யும் எந்தச் சின்னத் தொழிலிலிருந்தும் வரும் வருமானம் இது. ஒரு மளிகைக் கடை, இட்லி மாவு பிசினஸ் என எதுவாக வேணாலும் இருக்கலாம்.
2. Remuneration (Salary):
இது உங்களுக்கு வருகின்ற மாதாந்திரச் சம்பளம். பிரைவேட் அல்லது அரசு வேலை என நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஈட்டுகின்ற வருமானம்.
3. Rent (Rental income):
உங்களிடம் இருக்கின்ற கார், கேமரா, ஒரு வீடு அல்லது கடை என்று எதை வேண்டுமானாலும் வாடகைக்குக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கலாம். சும்மா இருக்கின்ற பொருளை வைத்துப் பணம் சம்பாதியுங்கள்!
4. Returns (Investment Returns):
ஸ்டாக் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து, அதில் இருந்து வருகின்ற வருமானம்.
5. Royalty:
ஒரு புத்தகம் எழுதி விற்கிறது, யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து பணம் சம்பாதிக்கிறது என உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவதன் வழியாக கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
6. Replication:
டிஜிட்டல் உலகத்தில், உங்களுக்குத் தெரிந்த விஷயங்களை அல்லது நீங்கள் expect ஆக விளங்கும் சப்ஜெக்ட்களை online course நடத்துவதன் மூலமாக வருமானம் பார்க்கலாம்.
7. Rights:
உங்கள் பிசினஸ் வெற்றி பெறும்போது, அதை Franchise ஆக விரிவுபடுத்தலாம் மற்றும் Subscription வழியாக வருமானம் ஈட்டலாம்.
இந்த ஏழு வழிகளைப் பயன்படுத்தி உங்கள் வருமானத்தையும், முதலீட்டையும் அதிகப்படுத்துங்க. அது உங்களது வாழ்க்கைத்தரத்தை மட்டுமில்லாமல், உங்க சந்ததியினரோட வாழ்க்கையையும் மேம்படுத்தும்!