‘கார்’ நடுத்தர மக்களின் ‘கனவு’. பணக்காரர்களின் ‘கௌரவம்’. நடுத்தர வர்க்கத்தினர் ஒரு காரையாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கடந்த காலங்களில் வசதியானர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த கார்கள் தற்போது நடுத்தர குடும்பத்தினரும் வாங்கும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்கள் மலிவான விலையில் போட்டி போட்டுக்கொண்டு கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.
ஏழு பேர் அமரக்கூடிய விசாலமான குடும்பக் காரை நீங்கள் தேடுகிறீர்களா, ஐந்து பெரியவர்களை ஏற்றிச் செல்லும் போது விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து கூடுதல் ஜோடி சூட்கேஸ்களை எடுத்துச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இந்த நான்கு வகையான 7 சீட்டர் கார்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டும்.
இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் 7 சீட்டர் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தேர்வுகளாக இந்த நான்கு மாடல்கள் உள்ளன. இதில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ (டீசல் எஸ்யூவி) கார்கள் ரூ.9.79 லட்சம் முதல் கிடைக்கின்றன. மேலும், ரெனால்ட் ட்ரைபர் (ரூ.6.15 லட்சம் முதல்) மற்றும் மாருதி எர்டிகா (ரூ.8.84 லட்சம் முதல்) ஆகியவையும் இந்த பட்டியலில் அடங்கும்.
பொலிரோ நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார் மாடலாகும். இந்த கார் ஏழுபேர் வசதியாக அமர்ந்து செல்லும் வகையில் உறுதியான கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொலிரோ 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 98.5 bhp மற்றும் 260 Nm டார்க்கை வழங்குவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அடிப்படை பாதுகாப்பு அம்சங்களுடன் பொலிரோ கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை ஏர்பேக்குகள், ABS உடன் EBD ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த விலை மற்றும் நல்ல மைலேஜ் கிடைப்பதால் பொலிரோ பெரும்பான்மையான மக்களின் விருப்ப தேர்வாக உள்ளது.
பொலிரோ நியோ என்பது, பொலிரோவின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பு, இது பிரீமியம் கேபின் மற்றும் அதிக சக்தி கொண்ட எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மஹிந்திரா அறிமுகப்பட்டுத்தியுள்ள பொலிரோ நியோ, பொலிரோவின் புதுப்பிக்கப்பட்ட மாடலாகும். மேலும் இது பொலிரோ விட வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொலிரோ நியோ 1.5 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இதில் டேஷ் போர்டு, பிரீமியம் இன்டீரியர் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் பொலிரோவை விட மேம்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பிரீமியம் கேபினின் மேம்பட்ட அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது. மேலும் இது, பொலிரோவை விட விலை அதிகம் என்றாலும் ஏழுபேர் வசதியாக அமரும் வகையில் சீட்டிங் கெபாசிட்டி, அதிக லக்கேஜ் வைக்க வசதியும் இருப்பதால் வாடிக்கையாளர்களின் விருப்பமான மாடலாக உள்ளது.
Renault Triber 7 seater)ரெனால்ட் ட்ரைபர் என்பது 7 இருக்கைகள் கொண்ட MPV ஆகும், இது அதன் மலிவு விலை மற்றும் இடத்தை மிச்சப்படுத்தும் வடிவமைப்பு மற்றும் ஏழு பெரியவர்கள் வரை வசதியாக அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிறைய சேமிப்பு இடங்களைக் கொண்ட நடைமுறைக்கு ஏற்ற கேபின் வசதியை கொண்டுள்ளது. ட்ரைபரை இரண்டு இருக்கைகள், நான்கு இருக்கைகள், ஐந்து இருக்கைகள், ஆறு இருக்கைகள் அல்லது ஏழு இருக்கைகள் கொண்ட வாகனமாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்ரைபர் 999cc எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோக்கள் மற்றும் உயர் டிரிம்களில் ஒருங்கிணைந்த இசை அமைப்பு போன்ற அம்சங்களை வழங்குகிறது. ட்ரைபரில் EBD உடன் ABS, நான்கு ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
மாருதி சுசுகி எர்டிகா, 7 இருக்கைகள் கொண்ட MPV, கார் ரூ.8.84 லட்சம் முதல் ரூ.13.13 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அடிப்படை LXi (O) வேரியண்ட் ரூ.8.84 லட்சத்தில் தொடங்குகிறது, அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் ZXi பிளஸ் AT வேரியண்ட் ரூ.13.13 லட்சத்தை எட்டும்.
மேலும் எர்டிகா, பெட்ரோலில் இயங்கும் போது, மைலேஜ் லிட்டருக்கு 20.3 முதல் 20.51 கிமீ வரை வழங்குகிறது. அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் பெட்ரோல் வேரியன்ட் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜை வழங்குகிறது. மாருதி எர்டிகா 7 பயணிகள் வசதியாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.