80C வருமான வரி விலக்கு எந்தெந்த முதலீடுகளுக்கு இந்த வரிவிலக்கு உண்டு?

80C வருமான வரி விலக்கு ...
80C வருமான வரி விலக்கு ...https://saral.pro
Published on

ருமான வரி செலுத்துபவர்களுக்கு, அரசாங்கம் வருடா வருடம் சில தலைப்புகளின் கீழ் வரும் முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்கிறது. இத்தகைய தலைப்புகள் பல உள்ளன. உதாரணமாக, 80C, 80D, 80E, 80G, 80U என பல்வேறு தலைப்புகள் உள்ளன.

இவற்றில் மிகவும் பிரபலமானது 80C. இதன் கீழ் தனிநபர்கள் மற்றும் இந்து ஒருங்கிணைந்த குடும்பம் (Hindu Undivided Family - HUF)  என்ற வகையில் வருமான வரி தாக்கல் செய்யும்போது, 80Cஇன் கீழ், ரூபாய். 1,50,000 வரை வருமான வரி விலக்கு கோர முடியும். தனிநபர்களின் வரிச்சுமையைக் குறைக்கவே இது அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதில் நிறுவனங்கள் போன்றவை வரி விலக்கு கோர முடியாது. இது அரசாங்கத்தின் அருமையான வரி விலக்குத் திட்டம். இதன் மூலம், மக்கள் இந்த 80Cஇன் கீழ் வரும் முதலீடுகள் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும், மக்களின் சில அத்தியாவசிய செலவுகளுக்கும் இதன் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.

80Cஇன் கீழ் வரும் வரி விலக்கு பட்டியலைப் பார்ப்போம்.

I. முதலீடுகள்:

1) பங்கு இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (Equity Linked Savings Scheme): 

இந்தத் திட்டத்தில் பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பணத்தை நம்மால் எடுக்க முடியாது.

2) தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme):

இந்தத் திட்டத்தில், நிலை 1(Tier 1) இல் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு. இந்தப் பணம் ஓய்வுகாலத்திற்கான பணம் என்பதால், இதனை நடுவில் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

3) தொழிலாளர் சேமநல நிதி(Employee Provident Fund): 

இந்தத் திட்டத்தில் ஊழியர் மற்றும் நிறுவனம் என இருவரும் சமமாக 12% அடிப்படை ஊதியம்(Basic salary) + அகவிலைப்படி(dearness allowance) தொழிலாளர் சேமநல நிதியில் முதலீடு செய்கின்றனர். இதனை நடுவில் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

4) பொது சேமநல நிதி (Public Provident Fund): 

இந்தத் திட்டத்தில், சொந்தமாக தொழில் செய்பவர்கள் மற்றும் தனிநபர்கள் ஓய்வுகாலத்திற்காக முதலீடு செய்யலாம். இதில் முதலீட்டினை நடுவில் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

5) அலகு இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Unit Linked Insurance Plan): 

இந்தத் திட்டத்தில் காப்பீடு மற்றும் முதலீடு இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்புடையது. இதில் பணத்தை நடுவில் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

6) தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificate): இந்தத் திட்டத்தில் அஞ்சலகம் சார்ந்த தேசிய சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தில் நடுவில் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

7) வரி சேமிக்கும் வைப்பு நிதிகள்(Tax saving Fixed Deposit): 

இந்தத் திட்டத்தில் 5 வருடங்களைத் தாண்டிய வைப்பு நிதியில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 5 வருடங்களுக்குள்ளாக பணத்தை நடுவில் எடுக்க முடியாது.

8) சுகன்யா சம்ருத்தி திட்டம் (Sukanya Samriddhi Yojana): 

இந்தத் திட்டத்தில், பெண் குழந்தைகளின் திருமணம் மற்றும் மேல்படிப்புக்காக பணம் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வரி விலக்கு உண்டு.  இதில் பணத்தை நடுவில் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு.

9) மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme): 

இந்தத் திட்டத்தில் மூத்தக் குடிமக்கள் செய்யும் முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு. இதில் பணத்தை நடுவில் எடுப்பதற்கு பல்வேறு அபராதங்கள் உண்டு.

Home loan...
Home loan...

II செலவுகள்:

1) ஆயுள் காப்பீட்டுத் திட்டம்(Life insurance Scheme): 

ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் செய்யப்படும் தவணைத் தொகைகளுக்கு வரிவிலக்கு உண்டு.

2) குழந்தைகளின் படிப்புச் செலவு(Student Tuition Fee): 

இரண்டு குழந்தைகள் வரை, முழுநேர படிப்புக்கு ஆகும் செலவிற்கு வரி விலக்கு உண்டு.

3) வீட்டுக் கடன் அசலுக்கானத் தவணை(Home loan principal repayment): 

வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணைத்தொகையில், அசலைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
அன்பு எனும் கலை சொல்லும் பாடம் என்ன?
80C வருமான வரி விலக்கு ...

நாம் பார்க்கும்போது, 80C சார்ந்த முதலீடுகளில் நடுவில் பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உண்டு என்பதை அறிய முடிகிறது. 80C வகைகள் சேமிப்பினை ஊக்கப்படுத்தவும், ஓய்வு காலத்தினை வளமாக ஆக்கவும் ஏற்படுத்தப்பட்டவை. நடுவில் எடுப்பதை தவிர்க்க இத்தகைய விதிமுறைகள் உள்ளன. 1,50,000 ரூபாய் பணத்தில் 30% வரி செலுத்தும் நபர், இத்தகைய 80C திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக, 45000 ரூபாய் வரி விலக்கினைப் பெறுகிறார்.

இந்த 80C இன் கீழ் பழைய வரி நடப்பின் மூலமே , வரி விலக்கு கோர முடியும். வருமான வரி செலுத்துபவர்கள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு, தங்களது வரியைக் குறைத்து, அந்த பணத்தை முதலீடு செய்து, எதிர்காலத்தினை வளமாக்கிக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com