two wheeler
two wheeler

ஹீரோ நிறுவனத்தின் வாகன விற்பனையில் புதிய உச்சம்!

ண்டிகை காலத்தில் ஹீரோ நிறுவனம் 14 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமாக திகழ்வது ஹீரோ மோட்டோ கார்ப்பின் நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவின் உற்பத்தி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மோட்டோ கார்ப்பின் நிறுவனம் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் நடப்பு பண்டிகை காலத்தில் இலக்கு நிர்ணயித்து விற்பனையை தொடங்கியது.

நவராத்திரி தொடங்கி தீபாவளி வரையிலான 32 நாட்கள் பண்டிகை காலத்தில் இலக்கைக் காட்டிலும் கூடுதலாக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இவ்வாறு பண்டியைக் காலத்தில் மட்டும் 14 லட்சம் இருசக்கர வாகனங்களை இந்தியாவில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவன விற்பனை செய்திருக்கிறது.

இது அதிகப்படியான பண்டியைக் கால விற்பனையாகும். 2022 ஆம் ஆண்டு அதே பண்டிகை காலத்தை ஒப்பிடும்போது 19 சதவீதம் விற்பனை உயர்ந்து இருக்கிறது. இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து இருக்கிறது. தற்போதைய பண்டிகை காலம் என்பது மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையாக மாறி இருக்கிறது.

நடப்பாண்டின் அக்டோபர் மாத காலகட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 930 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 26.5 சதவீதம் கூடுதல் விற்பனையாகும். மேலும் அதே காலகட்டத்தில் ஏற்றுமதியும் 29 சதவீதம் உயர்வைக் கண்டிருக்கிறது.

இந்திய ஏற்றுமதி துறை நடப்பு நிதியாண்டில் மந்தமான நிலையில் இருந்த போதும் இருசக்கர வாகன ஏற்றுமதியில் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டிருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com