குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மிகப்பெரும் முதலீடை செய்யும் அதானி குழுமம்!

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மிகப்பெரும்  முதலீடை செய்யும் அதானி குழுமம்!

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அதிக அளவிலான முதலீடை செய்ய உள்ளது அதானி குழுமம்.

அதானி குழுமம் குஜராத் மாநிலத்தில் அதிக அளவிலான ஆலைகளை தொடங்கி குஜராத் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் முந்த்ரா நகரில் அமைந்துள்ள துறைமுகத்தை மேம்படுத்தி, மேலும் முந்திரா நகர் பகுதியில் பல்வேறு ஆலைகளை ஏற்படுத்த 4 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக அறிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி, அதானி குழுமம் 25 ஆண்டுகளுக்கு முன்பு முந்த்ரா நகரில் காற்றாலை மற்றும் சோலார் பேனல் ஆலைகளுக்காக துறைமுகத்தை ஏற்படுத்தியது. அதனுடைய 25வது ஆண்டை முன்னிட்டு தற்போது துறைமுகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருக்கின்றோம்.

துறைமுகத்தின் மூலம் தற்போது 25 ஆயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மாதம் 5 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. தற்போது உள்ள 8 முனயங்களை மேலும் விரிவு படுத்தி கூடுதலாக 35 ஆயிரம் மக்கள் பயன் அடையும் வகையில் கடல்வழிப் போக்குவரத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடல் வழி போக்குவரத்து விரிவாக்கத்தால் முந்த்ரா நகர் பகுதி மிகப்பெரிய தொழிற்சாலை அடங்கிய தொழில்துறை பகுதியாக விரிவடையும். அதானி குழுமம் முந்த்ரா நகர் பகுதியில் பல்வேறு ஆலைகளை, தொழில் நிறுவனங்களை தொடங்க 4 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. காப்பர் ஆலையை உருவாக்க 8,783 கோடி முதலீடு செய்ய உள்ளது. 2030ல் மூந்த்ரா நகர் மற்றும் துறைமுக சார்ந்து 68, 923 கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com