அமெரிக்க டாலரின் அசுர ஆதிக்கம் வீழுமா? உலகப் பொருளாதாரத்தை உலுக்கும் பின்னணி!

Global Economy - அமெரிக்க டாலர்
Global Economy - அமெரிக்க டாலர்AI Image
Updated on

மெரிக்கா 250 வது சுதந்திர தினத்தை ஜூலை 4ம் தேதி கொண்டாடிய நிலையில், அந்நாட்டின் கரன்சியான அமெரிக்க டாலர் அமெரிக்காவின் தேசிய நாணயம் என்பதை விட உலக நாடுகளின் மத்திய வங்கிகளால் இருப்பு வைக்கப்படும் கரன்சியாக மாறிவிட்டது. அமெரிக்க டாலரில்தான் ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே வர்த்தகம் நடத்தப்படுகிறது. அமெரிக்க டாலர் உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத கரன்சியாக முக்கியத்துவம் பெற்றதற்கான காரணங்களை இப்பதிவில் காண்போம்.

1792ல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நாணயச் சட்டம் இயற்றப்பட்டு அமெரிக்க டாலர் அதிகாரப்பூர்வ கரன்சியாக அறிவிக்கப்பட்டபோது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக இப்போது இருக்கும் டாலரைப்போல பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் இருந்தது.

திருப்புமுனை மாற்றம்

1914-1918 ஆண்டுகளில் முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது அமெரிக்காவிடம் ஐரோப்பிய நாடுகள் உணவு, தொழில்துறை பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் மூலப்பொருட்கள் போன்றவற்றை வாங்க தொடங்கின. அமெரிக்கா வளர்வதற்கு இதுதான் மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனும் அதிகமாக கொள்முதல் செய்ததன் காரணமாக மெதுவாக ஐரோப்பாவில் தங்க கையிருப்பு குறைந்து பிரிட்டனின் ஆதிக்கம் பலவீனமடைந்தது. தொடர்ந்து உலக நாடுகளுக்கு கடன் கொடுக்கும் நாடாக பிரிட்டன் இருந்தபோதிலும், அமெரிக்காவின் வளர்ச்சி முதல் உலகப்போருக்கு பின் அசுரத்தனமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலகம் முழுவதிலும் நிதி கட்டமைப்பின் மறு சீரமைப்பிற்கு இந்த மாற்றம் வழி வகுத்தது.

இதையும் படியுங்கள்:
நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.5,000 சரிவு.! தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி.!
Global Economy - அமெரிக்க டாலர்

பிரெட்டன் உட்ஸ் மாநாடு

அமெரிக்காவின் பிரெட்டன் வுட்ஸ் நகரில் 1944 ம் ஆண்டு நடைபெற்ற பிரெட்டன் வுட்ஸ் மாநாட்டில் (Bretton Woods Conference) 44 சார்பு நாடுகளும் 700 பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நிலையில் அமெரிக்க நிதி மற்றும் பணவியல் மாநாடு என்று அழைக்கப்பட்ட இந்த மாநாடு, சர்வதேச நிதி சூழலை வலுவாக கட்டமைக்கவும் புதிய நிதி கட்டமைப்பை உருவாக்கவும் நடத்தப்பட்டது.

அமெரிக்கா உலக தங்கம் கையிருப்பில் மூன்றில் இரண்டு பங்கு வைத்து இருந்ததாலும், இரண்டாம் உலகப் போருக்கு பின் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் பெரும் சேதத்தை எதிர்கொண்டதாலும், அமெரிக்காவின் கை ஓங்கி இருந்தது. மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அவரவர் நாட்டு கரன்சியை தங்கத்துடன் நேரடி தொடர்பு வைப்பதை நீக்கி அமெரிக்க டாலருடன் தங்களது கரன்சியை இணைக்க ஒப்புக்கொண்டன.

ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர் நிலையான விலை தருவதாக அமெரிக்கா உறுதியளித்ததால் உலக பணவியல் முறையில் சர்வதேச நிதி சூழல் மறு கட்டமைப்பு செய்து டாலர் பிரதானமாக மாறத் தொடங்கியது. மேலும் 'லிக்விட் கரன்சியாக' தங்கத்துக்கு மாற்றாக சர்வதேச அளவில் டாலர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பிரெட்டன் வுட்ஸ் மாநாடு சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு அடித்தளமிட்டு 80 ஆண்டு களுக்கு மேலான நிலையிலும் அமெரிக்க டாலர் ஆதிக்கம் பெற்று விளங்கி வருகிறது.

Global Economy - அமெரிக்க டாலர்
Global Economy - அமெரிக்க டாலர்AI Image

நிக்ஸன் முடிவு

அமெரிக்க அதிபரான ரிச்சார்ட் நிக்சன் நேரடியாக டாலரை தங்கமாக மாற்றும் திட்டத்தை தடை செய்ததோடு ரிசர்வ் வங்கி கரன்சி வெளியிடும் நடைமுறையை அறிமுகப்படுத்தியது இன்று வரை தொடர்கிறது.

பெட்ரோடாலர் முறை

அமெரிக்கா சவுதி அரேபியாவுடன் 1974 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டது. 'பெட்ரோ டாலர்' என அழைக்கப்படும் இந்த முறையால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தங்கத்தை சார்ந்து இருக்காமல் டாலரில் வர்த்தகம் செய்யும் நடைமுறையால் சர்வதேச அளவில் டாலர் முக்கியத்துவம் பெற்றது.

டாலர் கையிருப்பு வைத்திருப்பது, டாலரின் கடன் பெறுவது டாலரில் வர்த்தகம் போன்ற நடைமுறைகளை உலக நாடுகள் மேற்கொள்ளும் வரை டாலரின் தாக்கம் குறையாது. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் முழுமையாக நடப்பதாலும், நம்பகமான வலிமையான கரன்சியாக டாலர் இருப்பதாலும் டாலரை அனைத்து நாடுகள் ஏற்றுக் கொண்டதாலும் டாலரின் மதிப்பு நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.

Reference:

logo
Kalki Online
kalkionline.com