இரண்டு நாட்களில் 194 பில்லியன் டாலர்களை இழந்த ஆப்பிள் நிறுவனம்:ஏன் தெரியுமா..?

இரண்டு நாட்களில் 194 பில்லியன் டாலர்களை  இழந்த ஆப்பிள் நிறுவனம்:ஏன் தெரியுமா..?

மெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 194 பில்லியன் டாலர்கள் குறைந்தது.

சீனா ஐபோன் கைப்பேசிகளை பயன்படுத்த அரசாங்க அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்போவதாக வந்த வால் ஸ்டீரீட் ஜெர்னல் அறிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 3.5% கடந்த புதன்கிழமை சரிந்தது. வியாழக்கிழமை தொடக்கத்தில் மேலும் 3% மதிப்பு குறைந்தது. மேலும், இந்தத் தடை, சீனாவின் மத்திய அரசு மட்டுமன்றி மாநிலங்களுக்கும் நீட்டிக்கப்படுமென்று கணிக்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் சீனாவிடமிருந்து வருகிறது. ஆப்பிளின் முக்கியமான தயாரிப்பு மையமாக சீனா உள்ளது. சீனாவில் ஹூவாய் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு கைப்பேசிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே நிலவும் பதற்றமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, இரண்டு நாடுகளிலும் மற்ற நாட்டுக் கைப்பேசியைப் பயன்படுத்துவதில் எதிர்ப்பு நிலவுகிறது.

தொழில்நுட்பம் ஒரு பெரிய பாதுகாப்பு அச்சுற்றத்தலாகப் பார்க்கப்படுகிறது. சீனாவில், வெளிநாட்டு மென்பொருட்களுக்கு மாற்றாக உள்நாட்டு மென்பொருட்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2027 ஆம் ஆண்டுக்குள், பல்வேறு அமெரிக்கத் தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களுக்கு, வேறு உள்நாட்டு மென்பொருள் மாற்றுமாறு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஐபோனில் உள்ள அதிகபட்ச தனிநபர் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக, ஊழல் அதிகாரியின் கைப்பேசியினைக் கைப்பற்றினால் கூட, அதிலிருந்து தகவல்களைத் திரட்டுவது கடினமாக உள்ளதாலும், சீனாவில் ஐபோனினை பயன்படுத்துவதை அரசாங்கம் எதிர்க்கிறது என சீனாவின் அரசாங்கத்தின் நிதிச்செய்தி வெளியீடான பினான்சியல் பப்ளிகேஷன் கூறுகிறது.இந்த ஐபோனின் மீதான தடை, ஐபோனின் விற்பனையை எதிர்காலத்தில் சீனாவில் குறைவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம், புதிதாக ஐபோனின் அடுத்தக் கைப்பேசி விற்பனையாக உள்ள நிலையில், இது ஐபோனினின் விற்பனையில் எந்த மாற்றத்தை உருவாக்குமென்பதைப் பொருத்திருந்துப் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com