கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நடுத்தர வர்கத்தின் குடும்பச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் கடன் வாங்கிவிட்டு தவிக்கும் இந்தியர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.இன்றைய பொருளாதார உலகில் கடன் வாங்குவது மிகவும் எளிதாகி விட்டது. வங்கியில் தனிநபர் கடனை வாங்க நாம் எங்கும் அலைய வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அந்த அளவிற்கு கடன் வழங்குதலை எளிதாக்கி விட்டன வங்கிகள். இதனால் தான் என்னவோ, இன்று கடனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. .கடன் வாங்கும் போது நமது தேவைகள் பூர்த்தி அடைகின்றன. ஆனால், அதனை மாதாமாதம் இஎம்ஐ மூலம் கட்டும் போது, வீட்டுத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் திணறுவோம். இதே நிலையில் தான் பல இந்தியர்கள் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக பெருநகரங்களில் தான் கடன் சுமையில் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம். கடன் வாங்கிய இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஈராண்டுகளில் இருந்ததை விடவும், நடப்பாண்டில் அதிகரித்து இருப்பதாக 'பேங்க்பஜார் 2024 ஆஸ்பிரேஷனல் இண்டெக்ஸ்' என்ற ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் பணிபுரியும் 22 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 1,529 பணியாளர்கள் இடையே கடன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 13.4% பேர் மட்டுமே கடன் சுமையின்றி நிம்மதியாக வாழ்கின்றனர். கடந்த 2022 இல் 19% ஆக இருந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருப்பது, பலரும் கடனில் சிக்கி மன அழுத்தத்தில் இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. சுமார் 25 இலட்ச ரூபாய் கடனில் 91% பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை முன்பு 88% ஆக இருந்தது. ஆய்வில் பங்கேற்ற அனைவருமே மாதம் ரூ.30,000-க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு ஆண்டு கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, நடுத்தர வர்க்க மக்களின் பொருளாதாரச் சூழல் எந்த அளவிற்கு கீழே உள்ளது என்பதைக் காட்டுகிறது. .கடன் வசதியை எளிதாக்கும் ULI அம்சம்!.மெட்ரோ இல்லாத நகரங்களில் வசிக்கும் மக்களில் 28% பேர், கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக குறைந்த அளவில் தான் கடன் வாங்குகின்றனர். இருப்பினும் இவர்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே மிகவும் சிரமப்படுகின்றனர். கடனின் தேவை கூட இந்தியாவின் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. கல்விக் கடனின் எண்ணிக்கை கிழக்கு இந்தியாவில் அதிகமாகவும், வாகனக் கடனின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகமாகவும், வீட்டுக் கடனின் எண்ணிக்கை மேற்கு மற்றும் வட இந்தியாவில் அதிகமாகவும் உள்ளன.குடும்பச் சூழல், விலைவாசி உயர்வு, குறைந்த சேமிப்பு, வீடு வாங்குவது மற்றும் விரைவாக ஓய்வு பெறுவது போன்றவை கடன் வாங்குவதற்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. நீங்களும் கடனில் சிக்கியிருந்தால், முதலில் கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள். கடனில்லா வாழ்வு தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும் மாமருந்து.