
அசோக் லேலண்ட் நிறுவனம் கனரக வர்த்தக வாகன உற்பத்தியை உலகம் முழுவதும் விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கனரக வர்த்தக வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது இந்துஜா குழுமத்தின் உடைய உறுப்பு நிறுவனமான அசோக் லேலண்ட். இந்நிறுவனம் தப்போது வர்த்தக வாகனங்களில் பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருகிறது.
இந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தினுடைய 75வது ஆண்டு விழாவில் நிறுவனத்தினுடைய தலைவர் தீரஜ் இந்துஜா பேசியது, இந்தியாவில் முன்னணி வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள அசோக் லேலண்ட், உலக அளவில் அதனுடைய சந்தையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் விநியோகஸ்தர்களை நியமிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளில் 13 விநியோகிஸ்தர்களை நியமித்துள்ளோம். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும், ஆசிய பிராந்தியத்திலும் விற்பனையை தீவிரப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்திய சந்தையிலும் மேலும் விற்பனையை அதிகரிக்கச் செய்ய பல்வேறு தொழில்நுட்பங்கள் தொடர்ந்து புகுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கக்கூடிய பேருந்து தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இது டிசம்பர் மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் உலகம் முழுவதும் நிறுவனத்தினுடைய சந்தை பரப்பை விரிவாக்கம் செய்ய நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கனரக வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனங்களில் 20வது இடத்தில் உள்ள அசோக் லேலண்டை முதல் 10 இடத்திற்குள் கொண்டு வருவதே இலக்கு. அதை நோக்கிய பயணத்தை விரைவு படுத்த தொடர் ஆலோசனைகள், முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் 10 டாப் நிறுவனங்களில் ஒன்றாக அசோக் லேலண்ட் உருவாக்க தற்போதைய கட்டமைப்பை மேலும் விரிவாக்க அனைத்து வகை பணியாளர்களுடைய ஒத்துழைப்பும் தேவை என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்துஜா குழுமத்தினுடைய முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.