வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு!

Income Tax Return
Income Tax ReturnImg. Credit: Studycafe

வருமான வரித்தாக்கல் செய்பவர்கள் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்குகிறது இந்தப் பதிவு.

நாட்டில் வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரித்தாக்கல் செய்வது முக்கியமாகும். பொதுவாக ஒவ்வொரு வருடமும் வருமான வரித்தாக்கல் செய்ய ஜூலை 31 தான் கடைசி நாளாக இருக்கும். மாதச் சம்பளத்திற்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்யும். இவர்கள் அனைவருமே வருமான வரித்தாக்கல் செய்யலாம். ஆனால், இதனைச் செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வருமான வரித்தாக்கல் செய்ய நினைப்பவர்கள் முதலில் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும். இல்லையெனில் வருமான வரித்தாக்கலை செய்ய முடியாது. ஆதார், பான் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே பலமுறை அறிவுறுத்திய நிலையில், தற்போது தாமதக் கட்டணம் செலுத்தி தான் இணைக்க வேண்டும். பணத்தைத் திரும்பப் பெற நாம் கொடுக்கும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மேலும், நாம் விண்ணப்பிக்கும் போது சரியான படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

மாதச் சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தனித்தனியான படிவங்கள் உள்ளன. பணியாளர்கள் ITR படிவம் 1-ஐ தேர்வு செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.50 இலட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் இந்தப் படிவத்தை தேர்ந்தெடுக்கலாம். வரித்தாக்கல் செய்வோர் எந்தவிதமான அசல் சான்றிதழ்களையும் இணைத்தல் கூடாது.

ஆண்டுத் தகவல் அறிக்கை மற்றும் படிவம் 26AS ஆகியவற்றைப் பதிவிறக்கி, TDS மற்றும் TCS-ஐ முன்னதாகவே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதனை உடனே சரி செய்து கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு விவரங்கள், வட்டி சான்றிதழ்கள், முகவரி, தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை சரி பார்த்துக் கொள்வது நல்லது. இப்போது வருமான வரித்தாக்கல் ஆன்லைனில் செய்யப்படுவதால் ஒருமுறைக்கு இருமுறை அனைத்தையும் சரிபாரத்துக் கொண்டு, அதன் பிறகு விண்ணப்பியுங்கள்.

இதையும் படியுங்கள்:
வருமான வரி கட்டுகிறீர்களா? பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா?
Income Tax Return

வருமான வரித்தாக்கல் செய்யும் போது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். இதனைக் கொடுத்து உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். எக்காரணம் கொண்டும் இந்த ஓடிபி-யை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது.

வருமான வரித்தாக்கல் செய்வது குறித்து ஆடிட்டர் ஷோபனிடம் கேட்ட போது, "வரித்தாக்கல் செய்ய இன்னும் நாட்கள் இருக்கறதே என நினைத்து கடைசி நாள் வரை இழுத்தடிக்க கூடாது. முன்கூட்டியே தாக்கல் செய்தால் ஒருவேளை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதோ அதனை சரிசெய்து கடைசி தேதி முடிவதற்குள் மீண்டும் வரித்தாக்கல் செய்யலாம். நான் கண்ட வரையில் பலருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு என்பது இல்லை. பொதுவாக தொழில் செய்பவர்கள் தான் அதிகமாக வரித்தாக்கல் செய்து பணத்தைத் திரும்பப் பெறுகின்றனர்" எனக் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com