இந்தியாவில் சாதனை படைத்த Audi கார் விற்பனை!

Audi car
Audi car

ந்தியாவில் 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உயர் ரக கார் வகைகளில் ஒன்றான Audi கார் 5,530 யூனிட் காரர்கள் விற்பனை ஆகியுள்ளன. இது 88 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் ஆடம்பரக்காரர்களுடைய விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை கண்டிருப்பதாக ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன. நடப்பு ஆண்டில் ஓணம் பண்டிகை முதல் தீபாவளி வரையிலான பண்டிகை காலகட்டத்தில் பல்வேறு வகையான ஆடம்பரக்காரர்களுடைய விற்பனை இந்தியாவில் வளர்ச்சியை கண்டிருக்கிறது. இது கடந்த 7 ஆண்டுகளில் கண்டிராத வளர்ச்சியாகும்.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் காரினுடைய இந்திய பிரிவு தலைவர் சந்தோச ஐயர் தெரிவித்து இருப்பது, வலுவான மற்றும் நம்பகமான ஆடம்பர கார்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்து வருவதனுடைய வெளிப்பாடாக நடப்பு நிதியாண்டின் பண்டிகை காலத்தில் ஆடம்பர கார் விற்பனை மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு இருக்கிறது. இந்திய மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையுடைய வெளிப்பாடாக விற்பனை உயர்வு இருக்கிறது.

ஆடி நிறுவனத்தினுடைய இந்திய பிரிவு தலைவர் பல்ஹீர் சிங் தல்லான் தெரிவித்திருப்பது, இந்தியாவில் ஆடி கார் மீதான பார்வை, அதனுடைய நம்பகத்தன்மை, பாதுகாப்பு, சிறப்பம்சம், புதுமையான மாடல் போன்ற தொடர் உழைப்பின் உடைய வெளிப்பாடாக இந்தியாவில் 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 5,530 யூனிட் காரர்கள் விற்பனை ஆகியுள்ளன. இது 88 சதவீத வளர்ச்சியாகவும். குறிப்பாக ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் அதிக அளவிலான ஆடி ரக ஆடம்பர கார்கள் விற்பனையாகி உள்ளன.

பிஎம்டபிள்யூ நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, புதுப்புது ரகங்கள், புது புது மாடல்கள் கொண்ட புதிய ஆடம்பர கார்களின் விற்பனை உயர்வு இந்திய பொருளாதாரத்தின் உடைய வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இந்தியாவின் ஆடம்பரக்காரர்களுடைய விற்பனை இருந்தது.

2027 ஆம் ஆண்டு 1.54 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் ஆடம்பர கார்களினுடைய விற்பனை அதிகரிக்கும். இது 6.4 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்படி பல்வேறு நிறுவனங்களினுடைய ஆடம்பரக்காரர்களுடைய விற்பனை பண்டிகை காலத்தில் உயர்வை சந்தித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com