பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடன் வழங்க தடை! அதிரடி உத்தரவுபோட்ட ஆர்பிஐ!

Bajaj Finserv
Bajaj Finserv
Published on

ந்தியாவின் மிக முக்கிய நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இரண்டு பிரிவுகளின் கீழ் கடன் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் விளங்குகிறது. பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக பலதரப்பட்ட மக்களுக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சில ஆயிரங்கள் முதல் பல கோடிகள் வரை இந்நிறுவனம் கடனாக வழங்கி வருகிறது.

மேலும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து எளிதில் கடன் பெற முடியும் என்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் அவசர காலத் தேவையை பூர்த்தி செய்யவும், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் என்று பல்வேறு தேவைகளுக்காக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை நாடி செல்கின்றனர்.

இதனாலேயே பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் மிகப் பெரும் அளவில் கிளைகளை பரப்பி மிகப்பெரிய தனியார் நிதி நிறுவனமாக செயலாற்று வருகிறது. அதேநேரம் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் விதிக்கப்படும் வட்டி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் கடன் பெற்றவர்களிடமிருந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இ காம் மற்றும் இன்ஸ்டால் இ எம் ஐ கார்டு ஆகிய பிரிவுகளின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தற்போது தடை விதித்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளும் டிஜிட்டல் முறையில் கடன் வழங்க உதவும் நடைமுறைகள் ஆகும். இந்த இரண்டு நடைமுறைகளிலும் சரியான விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை என்றும், இதனால் பயனாளர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறி இந்த இரண்டு பிரிவுகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த இரண்டு பிரிவுகளில் குறைபாடுகளை சரி செய்து உண்மையான விவரங்களை வெளியிடும் வரை இந்த தடை தொடரும் என்றும், அதோடு உடனடியாக இந்த தடை உத்தரவு அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ரிசர்வ் வங்கியினுடைய இந்த அதிரடி அறிவிப்பு இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிதி நிறுவனங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனத்திற்கே இந்த நிலை என்றால் ஏனைய நிறுவனங்கள் என்ன ஆகும் என்று டிஜிட்டல் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் தற்போது பதற்றம் அடைந்திருக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com