9 ஆண்டுகள் நிறைவுச் செய்துள்ள பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டம்!

9 ஆண்டுகள் நிறைவுச் செய்துள்ள பிரதமரின் ‘ஜன் தன் யோஜனா’ திட்டம்!

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது இதுவரை, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் வங்கிக் கணக்கினை தொடங்குவதற்கு நல்லதொரு முகாந்திரமாக இருந்து வந்துள்ளது. இதன் மூலம், நிதிசார்ந்த பங்களிப்பில், எல்லாரும் எளிதாக பங்கேற்றுக் கொள்ள முடிகிறது.

இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

1. வங்கிக் கணக்குத் தொடங்க, பரமாரிக்க கட்டணங்கள் இல்லை

2. குறைந்தபட்ச பாக்கி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை

3. இலவச ரூபே பற்று அட்டை

4. ரூபே பற்று அட்டையுடன் 2 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு

5. ஓய்வூதிய மற்றும் காப்பீட்டிற்கான வாய்ப்புகள்

6. இந்திய அளவிலான எளிமையான பணப் பரிமாற்ற வாய்ப்புகள்

7. ரூபாய் 10,000 வரையிலான மிகை எடுத்தல்(over draft), சில குறிப்பிட்ட கணக்குகளுக்கு கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி, பிரதம மந்திரி நரேந்திர மோடி, ஜன்தன் யோஜனா கணக்குகள் 50 கோடியைத் தாண்டிய மகிழ்ச்சிகரமானச் செய்தியைப் பகிர்ந்துக் கொண்டார். அவற்றில் 56% கணக்குகள் பெண்கள் தொடங்கியது , பாலின சமத்துவத்தைக் காட்டுவதாக உள்ளது.

8. 67% கணக்குகள் இடை-நகரப்புற, கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவை என்பது இதன் இந்திய அளவிலான ஊடுருவலைக் காட்டுகிறது.பிரதான் மந்திரி தன் ஜன் யோஜனா - ஜாம் (JAM) என்ற தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

9. J- Jan Dhan Yojana - ஜன் தன் யோஜனாA - Aadhar - ஆதார்M - Mobile - கைப்பேசி இந்த மூன்றின் மூலம், மானியத் தொகைகள் ஏழை , எளிய மக்களின் வங்கிக் கணக்கினை நேரடியாக அடைய முடிகிறது.

இது ஆகஸ்டு 28, 2014 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது சமூகத்தில் நலிவடைந்தோருக்கான அருமையான வங்கி முகாந்திரமாக உள்ளது.

அரசின் அறிக்கையின் படி, இந்த தன் ஜன் யோஜனாவில் உள்ள கணக்குகளின் மொத்த பற்றுத் தொகை, 2.04 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. மேலும், 34 கோடி இலவச ரூபே பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தக் கணக்குகளில் சராசரி பாக்கித் தொகை ரூபாய். 4,076 என உள்ளது.இந்த தன்ஜன் யோஜனா கணக்குகள், இந்தியாவின் நிதியின் சாத்தியக் கூறுகளை பரவலாக்கியுள்ளன. இது பாரம்பரிய வங்கிகளை, இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம், தொழில்நுட்பம், ஒருங்கிணைத்தல், புத்தாக்கம் போன்றவற்றின் மூலம் எடுத்துச் சென்றுள்ளது.நீங்கள் இத்தகையத் திட்டத்தில் பயன்பெற முயலுங்கள். மேலும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com