பணம், மேலும் பணத்தினை உருவாக்கும் - 8800 டாலர்கள் 65 இலட்சம் டாலர்கள் ஆன வரலாறு... கூட்டு வட்டியின் மகத்துவம்!

Compound interest
Compound interest
Published on

கூட்டு வட்டியின் மகத்துவத்திற்கு பல பிரபல உதாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்களின் கூட்டுவட்டி பயன்பாடு.

“Money makes money. And the money that money makes, makes money.”

– Benjamin Franklin

பணம் பணத்தினை உருவாக்குகிறது. பணத்தால் உருவான பணம், மேலும் பணத்தினை உருவாக்குகிறது - பெஞ்சமின் பிராங்க்ளின்

பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் தனது உயிலில், அவருக்குப் பிடித்த நகரங்களான பாஸ்டன் (பிறந்த ஊர்) மற்றும் பிலடெல்பியா (வாழ்ந்த ஊர்) விற்கு தலா 1000 பவுண்டுகள் அறக்கட்டளை வாயிலாக ஒதுக்கி இருந்தார். அதற்கு ஈடான டாலர் மதிப்பீடு 4400 டாலர்கள்.

அந்தப் பணத்தினைச் சொந்தமாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு, கடன் தந்து உதவி, வருடா வருடம் 5% வட்டி விகிதத்தில் கடன் வழங்குமாறு அறிவுறுத்தியிருந்தார். 100 வருடங்கள் வரை அந்த அசலானது தொடப்படக் கூடாது. 100 வருடங்களுக்குப் பிறகு, அதில் 75% எடுத்துக் கொண்டு, பொது காரியங்களுக்குப் பயன்படுத்தலாம். 200 வருடங்களுக்குப் பிறகு, மொத்த பணத்தையும் எடுத்து பொது காரியங்களுக்குப் பயன்படுத்தலாம்.

கி.பி 1790 ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளைகள் தொடங்கப்பட்டன.

கி.பி 1890 ஆம் ஆண்டு, அந்த 1000 பவுண்டுகள், பாஸ்டன் அறக்கட்டளையில் 131,000 பவுண்டுகளாக (391,000 டாலர்கள்) மாறியது. அதில் பெருமளவு பாஸ்டன் வாணிப பள்ளிக்கூடம் அமைக்க உதவியது.

கி.பி 1990 ஆம் ஆண்டு, அந்த 1000 பவுண்டுகள், பாஸ்டன் அறக்கட்டளையில் 5 மில்லியன் டாலர்களாக ஆகியது.

இதைப் போலவே, பிலடெல்பியா அறக்கட்டளையானது, கி.பி 1990ம் ஆண்டு 1.5 மில்லியன் டாலர்கள் ஆகியது. பிலடெல்பியா அறக்கட்டளை, பாஸ்டன் அறக்கட்டளையைப் போல் மிகவும் ஜாக்கிரதையாக கடன் வழங்காத காரணத்தினால், பாஸ்டன் அறக்கட்டளை அளவு பணத்தினைப் பெருக்க இயலவில்லை. ஆனால், அது பெஞ்சமின் பிராங்களின் அவர்கள் விரும்பியபடி, அடித்தட்ட மக்களுக்கு கடன் அளித்து, அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவியது.

எனவே, 4400 + 4400 = 8800 டாலர்கள் கிட்டத்தட்ட, 65 இலட்சம் டாலர்கள் அல்லது 6.5 மில்லியன் டாலர்கள் ஆகியது. இந்தப் பணத்தினை பொது காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்த நகரங்கள், கி.பி 1890 ஆம் ஆண்டு, 75% வளர்ந்த பணத்தில் கை வைக்காமிலிருந்தால், அந்தப் பணமானது கிட்டத்தட்ட 760 இலட்சம் டாலர்கள் அல்லது 76 மில்லியன் டாலர்களாக மாறியிருக்கும். எனவே, எந்த ஒரு கூட்டு வட்டி திட்டத்திலும், பணத்தினை நடுவில் எடுப்பதென்பது, பொன் முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.

இதையும் படியுங்கள்:
Nifty 50 முதலீடு, நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்குமா?
Compound interest

1. டாலரும், பெஞ்சமின் பிராங்க்ளின் கணக்கும்:

உதாரணமாக, 1 டாலர், பெஞ்சமின் பிராங்களின் கணக்குபடி 5% வருடாந்திர கூட்டு வட்டியில், 100 ஆண்டுகளில், 200 ஆண்டுகளில் எவ்வளவு வளர்ந்திருக்கும் என்று பார்ப்போம்.

100 ஆண்டுகளில் 1 டாலர், 130.5 டாலர்களாக ஆகியிருக்கும்.

200 ஆண்டுகளில், 17291 டாலர்கள் ஆகியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவுக்கு இவ்வளவு கடனா? திருப்பிக் கொடுக்கலைன்னா என்ன ஆகும் தெரியுமா? 
Compound interest

சாதாரண வட்டி விகிதமான, 5% இவ்வளவு தூரம் பணத்தினைப் பெருக்குவதற்கு ஒரே காரணம் கூட்டு வட்டியின் மகத்துவமே. கூட்டு வட்டி ஒரு அருமையான பணத்தினைப் பெருக்கும் சாதனம்.

கூட்டு வட்டித் திட்டங்களில் பணத்தினை முதலீடு செய்து, நீண்ட காலத்தில் கூட்டு வட்டியினைப் பயன்படுத்தி, நமது ஓய்வு காலத்தினை வளமாக்கிக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com