
பணத்தை சரியாக கையாள்வது ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதி. கல்வி, உணவு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான செலவுகள் ஏராளம். ஆனால், பட்ஜெட் திட்டத்தின் மூலம், இவ்வாறான செலவுகளை திட்டமிட்டு, சிறு சேமிப்புகளை தொடங்குவது எளிமையாகும்.
இந்த பழக்கத்தை மாணவர்கள் விரைவில் கற்றுக்கொள்வது, அவர்களுக்கு பணத்தைச் சேமிக்கவும், தவறான செலவுகளை தவிர்க்கவும் உதவும். அந்த வகையில், பட்ஜெட் திட்டத்தை தொடங்குவதற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய எளிமையான வழிமுறைகள் பற்றி காணலாம்.
வருமானத்தை தெரிந்து கொள்ளுங்கள்:
பட்ஜெட் திட்டத்தை தொடங்குவதற்கு, முதலில் உங்கள் வருமானத்தை கணக்கிடுங்கள். பெற்றோர் கொடுக்கும் பணம், சிறு சிறு வேளைகளில் சம்பாதித்த பணம் என உங்கள் மொத்த வருமானத்தை சரியாக கணக்கிடுங்கள்.
செலவுகளை பிரித்து அமைக்கவும்:
மாணவராகிய நீங்கள் செலவிடும் பணம் உணவு, போக்குவரத்து, கல்வி என பலவித பயன்பாட்டிற்கு இருக்கலாம். அதில் உங்கள் தினசரி மற்றும் மாதாந்திர செலவுகளை பிரித்து, எந்த செலவுகள் மிகவும் முக்கியமானவை என்பதை கண்டறிய வேண்டும்.
பணத்தை சேமிக்கவும்:
மாணவர்கள் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கி, தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் சிறிய தொகைகளை சேமிக்கலாம். நல்ல பழக்கம் உருவாகும் . இது எதிர்காலத்தில் அதிகமான பணத்தை சேமிக்க உதவும்.
நிதி செயலிகளை பயன்படுத்துங்கள்:
நிதி மேலாண்மை செயலிகள் செலவுகளை கண்காணிக்க உதவுகின்றன. இதன் மூலம், மாணவர்கள் செலவுகளை எளிதாக கணக்கிட்டு, தேவையான மாற்றங்களை செய்ய முடியும்.
பணத்தை அதிகரிக்க வழிகள் தேடுங்கள்:
மேலும் பணம் சம்பாதிக்க, சிறிய வேலைகளை செய்து அல்லது தொழில்நுட்ப வாய்ப்புகளை பயன்படுத்தி வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கலாம்.
பட்ஜெட் திட்டம் என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இது இன்றோடு மட்டும் அல்லாமல் எதிர்கால வாழ்கையையும் சிறப்பாக மாற்றி அமைக்க சிறந்த வழியாக திகழும். அதனால், மாணவர்கள் இன்றே பட்ஜெட் திட்டத்தை தொடங்கினால், எதிர்காலத்தில் பணத்தை எப்படி கையாள்வது என்பதை பற்றி நல்ல முறையில் கற்றுக் கொள்ள முடியும்.
மேலும், நாம் எப்போது எவ்வாறு பணத்தை சேமித்து, செலவிடுவது என்பதையும் தெளிவாக அறிந்து, நம்முடைய பொருளாதாரத்தைச் சிறப்பாக கையாளலாம்.