விற்பனைக்கு காத்திருக்கும் கனரா வங்கியின் பங்குகள்.. முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!

Canara Bank
Canara Bank

னரா வங்கி தனது துணை நிறுவனத்தின் பங்குகளின் பெரும் பகுதியை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், செயல்முறை திட்டங்களில் மாற்றம் செய்யவும் தற்போது முடிவு செய்து இருக்கிறது.

கனரா வங்கியின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த கனரா ஃபேக்டர்ஸ் (canara factors ltd) நிறுவனத்தின் 70 சதவீத பங்குகள் பட்டியலிடப்படாமல் கனரா வங்கி வசம் உள்ளது.

canara factors ltd
canara factors ltd

இந்த நிலையில் வங்கியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக நிதி திரட்டும் செயல்பாடாக கனரா ஃபேக்டர்ஸ் நிறுவனத்தின் 70 சதவீத பங்குகளை விற்பனை செய்ய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கனரா ஃபேக்டர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதேசமயம் கனரா வங்கியின் மற்றொரு இணை நிறுவனமாக செயல்பட்ட கன்பேங்க் கம்ப்யூட்டர் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 64.14 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. மேலும் பரோடா வங்கி, டிபிஎஸ் பேங்க் இந்தியா லிமிடெட் நிறுவனங்களும் அந்த நிறுவனத்தின் பங்குகளை கைவசம் வைத்துள்ளன. இதனால் மற்ற நிறுவனங்கள் வைத்துள்ள பங்குகளை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

canbank computer services ltd
canbank computer services ltd

இதன் மூலம் கனரா வங்கி தன்னுடைய வர்த்தக செயல்பாட்டை நிலையானதாக கொண்டு செல்லவும், அதேசமயம் விரிவுபடுத்தவும் முடிவு செய்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com