Infosys நாராயணமூர்த்தி தொடக்க காலத்தில் சந்தித்த சவால்கள்!

Infosys Narayanamurthy.
Infosys Narayanamurthy.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது தொடக்க காலத்தில் சந்தித்த சவால்களை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தினுடைய நிறுவனரும், இங்கிலாந்து நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் மாமனாருமான நாராயணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை அமெரிக்க வாழ் இந்தியரான சித்ரா பானர்ஜி திருவாகாருணி எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் நாராயண மூர்த்தியின் தொடக்க கால வாழ்க்கை குறித்து கூறும்போது, இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தனது ஆரம்பகால பிசினஸ் பயணத்தின் போது அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரைச் சேர்ந்த டான் லில்ஸ் என்ற தொழிலதிபருடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். அதே நேரம் டான் லில்ஸ் நாராயண மூர்த்தியை ஒரு கிடோனில் தங்க வைத்து அவமரியாதை செய்திருக்கிறார்.

அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு தொழிலில் மிகப் பெரிய வெற்றியாளனாக மாறிய பிறகு "நாம் விருந்தாளியை எவ்வாறு உபசரிக்கிறோம் என்பதில் தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது. நம்மை காட்டிலும் நம்மை நோக்கி வரும் விருந்தாளிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்று என் அம்மா கற்றுக் கொடுத்த வார்த்தைகளும், என்னுடைய தொடக்க கால பிசினஸ் வாழ்க்கையில் நான் அனுபவித்தவையும் எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. இதுவே எனது வெற்றிக்கான காரணமாகவும் இருக்கலாம் எனறு நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
E-Soil: மண்ணுக்கு கரண்ட் கொடுத்தால் செடி வேகமாக வளரும்! 
Infosys Narayanamurthy.

மேலும் தனது மனைவி சுதா இன்போசிஸ் நடவடிக்கைகளில் ஈடுபட ஆர்வம் காட்டிய பொழுது ஒரே குடும்பத்திலிருந்து இருவர் தொழிலில் கவனம் செலுத்தினால் குடும்பம் பாதிக்கப்படும். அதே நேரம் தொழில் ரீதியான விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்று கூறி தனது மனைவியை தொழில் நடவடிக்கையில் ஈடுபடுத்த தவிர்த்து இருக்கிறார் என்று அந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய சிறிய செயல்பாடுகளுக்கும் தொலைநோக்கு பார்வைக் கொண்டிருந்ததால் நாராயணமூர்த்தி வெற்றி பெற்று இருக்கிறார் என்று புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com